இனி மகளிர் உரிமை தொகை 1500ஆம்- உறுதி அளிக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை!

0
141
#image_title

இனி மகளிர் உரிமை தொகை 1500ஆம்- உறுதி அளிக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெட்ரோல், டீசல் விலையை 70ஆக நிர்ணயம் செய்வது, சமையல் சிலிண்டர் விலையை 500ஆக குறைப்பது உள்ளிட்ட 2024ஆம் ஆண்டிற்கான திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டு இருந்தார்.

அதனை தொடர்ந்து, அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சுங்க சாவடிகளை முற்றிலுமாக நீக்குவது, மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமை தொகையை 1000லிருந்து 3000 ஆக உயர்த்தி மத்திய அரசிடம் வாங்கி தருவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உதவி தொகையை நிறுத்திவிடும் என கூறி வருகிறார் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், ஆனால் பாஜக தமிழகத்தில் வென்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமை தொகையை 1000லிருந்து 1500யாக நிச்சயம் உயர்த்துவோம் என அறிவித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.