பெரும்பாலான மக்கள் தங்களுடைய ஓய்வு காலத்தில் நிலையான ஓய்வூதியம் பெறுவதற்கான முதலீடுகளை தேடி வருகின்றனர். அவற்றில் சிறந்த முதலீடாக தேசிய ஓய்வூதிய திட்டமானது விளங்கி வருகிறது. இத்திட்டம் குறித்து விரிவான செய்தியை இந்த பதிவில் காண்போம்.
NPS எனப்படும் இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெற முதலில் மனைவியினுடைய பெயரில் தனி கணக்கை உருவாக்க வேண்டும். அதன்பின் உங்களுடைய மனைவிக்கு 60 வயது முதிர்ந்த பிறகு பெரிய தொகை ஒன்றை இந்த திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு ஓய்வூதியம் பெற வேண்டும் என்பதையும் வாடிக்கையாளரே முடிவு செய்து கொள்ளும் வகையில் இந்த திட்டமானது அமைந்திருப்பது அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு வருடம் என கணக்கில் கொண்டு வாடிக்கையாளர்கள் அவர்களுடைய டெபாசிட் பணத்தை முதலீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இத்திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாய் முதல் நம்முடைய முதலீட்டை தொடங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் கூட தங்களுடைய ஓய்வு காலத்தை நிம்மதியாக செலவழிக்கும் வண்ணம் இத்திட்டம் அமைந்திருக்கிறது.
உதாரணத்திற்கு, ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் டெபாசிட் செய்கிறோம் என்றால், ஒரு ஆண்டுக்கு 60,000 ரூபாய் வீதம் 30 ஆண்டுகளில் உங்களுடைய முதலீடு 18 லட்சமாக உயரும். எனில் உங்களுடைய ஓய்வூதிய காலத்தில் எனில் உங்களுடைய ஓய்வூதிய காலத்தில் வங்கி கணக்கில் ரூ.1,76,49,569 பணம் இருக்கும். மேலும் இதற்கான சராசரி வட்டி விகிதம் 12% என வைத்துக் கொண்டால், உங்களுக்கு கிடைக்கக்கூடிய வட்டி மட்டும் ரூ. 1,05,89,741 ஆக இருக்கும்.
நம்பிக்கையான மற்றும் தங்களுடைய ஓய்வு காலத்தை நிம்மதியாக வாழ நினைப்பவர்கள் இத்திட்டத்தில் இணைவதன் மூலம் தங்களுக்கான ஓய்வூதியத்தை தாங்களே முடிவு செய்துகொண்டு வாழும் வாய்ப்பினை பெறுவது குறிப்பிடத்தக்கது.