Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜிம் க்கு போகாமலேயே உடல் எடையை குறைக்க இப்படி சாப்பிடுங்கள்!!

உணவுக் கட்டுப்பாடு என்பது சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பின்பற்ற வேண்டிய நல்ல விஷயமாகும்.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நாம் டயட் என்ற பெயரில் கட்டுப்பாடுடன் உணவு உட்கொள்கிறோம்.

சிலர் உணவு குறைவான அளவு மட்டும் சாப்பிட்டு உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.சிலர் சரியான உணவு இல்லாமல் வெறும் திரவ உணவுகளை மட்டும் உட்கொண்டு உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடுகின்றனர்.இப்படி உடல் எடையை குறைக்க பலரும் விரும்புகின்றனர்.சிலர் அறுவை சிகிச்சை செய்து உடல் எடையை குறைகின்றனர்.

இப்படி பல வகைகளில் உடல் எடையை குறைக்கும் முறை இன்றைய காலத்தில் இருக்கின்றது.ஆனால் தற்பொழுது பின்பற்றப்படும் டயட் முறைகள் பாதுகாப்பானதா என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது.காரணம் டயட் பின்பற்றுபவர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவால் இறந்து விடுகின்றனர் போன்ற செய்திகள் அவ்வபோது செய்திகளில் வந்த வண்ணம் இருக்கின்றது.

விரைவில் உடல் எடையை குறைக்க நினைத்து ஆபத்தான டயட்களை பின்பற்றுகின்றனர்.போதிய உணவுகள் இன்றி வெறும் திரவ ஆகாரங்களை மட்டும் பருகுவதால் நாளடைவில் சத்து குறைபாடு ஏற்படத் தொடங்கி உணவுக் குழாய் சுருங்கி நாளடைவில் இறக்க நேரிடுகிறது.

நீங்கள் உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ள விரும்பினால் ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து சரியான அளவில் உட்கொள்ள வேண்டும்.கொழுப்பு நிறைந்த உணவுகளை மிகவும் குறைவான அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கிய திரவ ஆகாரங்களை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.காய்கறிகளை எண்ணையில் வதக்காமல் நீராவியில் வேகவைத்து உட்கொள்ள வேண்டும்.பயறுகளை முளைக்கட்ட வைத்து நீராவியில் வேகவைத்து உட்கொள்ள வேண்டும்.

இனிப்பு உணவுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.உணவை நான்கு அல்லது ஐந்து வேளையாக சிறு சிறு அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.உறக்கத்தை சரியாக கடைபிடிக்க வேண்டும்.ஹோட்டல் உணவுகள்,சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.ஆரோக்கியமான உணவுகளுடன் உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் எடையை பராமரிப்பது சுலபமாகிவிடும்.

Exit mobile version