இனி வீட்டிலிருந்தே ரூ.50 செலவில் QR பான் கார்டு பெற்றுக் கொள்ளலாம்!! எளிமையான வழிமுறை!!

0
94
Now you can get a QR PAN card from home at a cost of Rs.50!! Simple method!!

நிதி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு முக்கிய அடையாள எண்ணாக பான் கார்டு உள்ளது. வரி ஏய்ப்புகளை தடுப்பதில், பான் கார்டுகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. தற்பொழுது கியூ ஆர் கோடுடன் கூடிய புதிய பான் அட்டையை, ஆன்லைன் வழியாக அப்டேட் செய்து பெற்றுக்கொள்ளும் வசதியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும், விண்ணப்பித்தவர்களின் முகவரிக்கே பான் கார்டு அனுப்பி வைக்கப்படும். இதனை எவ்வாறு விண்ணப்பிப்பது என்ற வழிமுறைகளை இந்த பதிவில் காண்போம்.

உயர் மதிப்பில் தங்கம், நிலம் வாங்குவதற்கும் தற்போது பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்கம் டேக் ஸ் கட்டுவதற்கும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆதார் கார்டுக்கு நிகரான அனைத்து வசதிகளும் தற்போது, பான் கார்டிலும் கொண்டு வரப்பட உள்ளது. ஆதார் கார்டில் உள்ள பான் கார்டிலும் கியூ-ஆர் கோடு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

QR கோடுடன் புதிய பான் கார்டு விண்ணப்பிக்கும் முறை :-

✓ ஏற்கனவே பான்காடு வைத்திருப்பவர்கள், என்எஸ்டிஎல் மூலமாக வாங்கி இருந்தால் https://www.onlineservices.nsdl.com/paam/ReprintEPan.Html?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

✓ யுடிஐஐடிஎஸ்எல் மூலம் பான்கார்டு பெற்று இருந்தால் https://www.pan.utiitsl.com/PAN_ONLINE/CheckPANreprint.Action?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இரண்டில் எந்த போர்ட்டல் வழியாக விண்ணப்பித்து இருந்தோம் என்று தெரியாமல் இருந்தால், நீங்கள் மேற்கூறிய ஏதாவது ஒரு இணையதளத்தில் அப்ளை செய்து பார்த்தால் அந்த இணையதளத்திலேயே சரியானதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

✓ அதன்பின், இந்த இணையதளத்தில் நீங்கள் பான்கார்டு எண், ஆதார் எண், பிறந்த மாதம் மற்றும் பிறந்த வருடம் ஆகியவற்றை குறிப்பிட்டு சப்மிட் செய்ய வேண்டும்.

✓ சப்மிட் செய்ததவுடன் முகவரி, செல்போன் எண், இ-மெயில் முகவரி போன்றவை தெரியும். அது சரியானாதா என்பதனை நீங்கள் உறுதிப்படுத்தி கொள்ளலாம்.

✓ அடுத்ததாக உங்களுடைய மெயில், செல்போன் அல்லது இரண்டுக்கும் ஓடிபி வரும். ஒருமுறை கடவுச்சொல் எனப்படும் ஒடிபி-யை பதிவிட வேண்டும். அதன்பிறகு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.

கட்டணத்தை ஆன்லைனிலேயே செலுத்தலாம். கட்டணம் செலுத்தி முடித்து விட்டால் போதும், நீங்கள் கொடுத்துள்ள முகவரிக்கே 15 முதல் 20 நாட்களுக்குள் வந்து விடும்.

✓ உங்கள் பான்கார்டில் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தவறாக பதிவாகியிருந்தால் முதலில் அதனை மாற்ற வேண்டும். இதற்கான வசதி அந்த இணையதளத்திலேயே உள்ளது. அட்ரஸ் மாறியிருந்தாலும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அட்ரஸ் அப்டேட் செய்து கொள்ள முடியும்.