கமகமக்கும் “குழம்பு மிளகாய் தூள்” இனி வீட்டிலேயே செய்யலாம்!! 40 வகை குழம்பிற்கு இந்த ஒரு பொடி போதும்!!

0
78
#image_title

கமகமக்கும் “குழம்பு மிளகாய் தூள்” இனி வீட்டிலேயே செய்யலாம்!! 40 வகை குழம்பிற்கு இந்த ஒரு பொடி போதும்!!

பருப்பு,காய்கறி கூட்டு,காய்கறி குழம்பு உள்ளிட்ட பல பல்வேறு உணவுகளின் ருசியை கூட்டுவதில் குழம்பு மிளகாய் தூள்ளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.இந்த குழம்பு மிளகாய் துளை கடையில் வாங்கி உபயோகிப்பதை விட வீட்டில் தயாரித்து சமையல்களில் சேர்த்து வந்தோம் என்றால் உணவு மணமாகவும் இருக்கும்,உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*கொத்தமல்லி விதை – 150 கிராம்

*வர மிளகாய் – 100 கிராம்

*மஞ்சள் தூள் – 5 கிராம்

*சீரகம் – 3 தேக்கரண்டி

*மிளகு – 1 1/2 தேக்கரண்டி

*கடலைப் பருப்பு – 1 1/2 தேக்கரண்டி

*துவரம் பருப்பு – 1 1/2 தேக்கரண்டி

*புழுங்கலரிசி – 1 1/2 தேக்கரண்டி

*வெந்தயம் – 1 1/2 தேக்கரண்டி

*கடுகு – 1 1/2 தேக்கரண்டி

*கறிவேப்பிலை – 2 கொத்து

செய்முறை:-

1)அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் மிதமான தீயில் கொத்தமல்லி விதைகளை சேர்த்து வாசம் வாசனை வரும் வரை வறுக்கவும்.கொத்தமல்லி கருகிடாமல் பார்த்து கொள்ளவும்.2 அல்லது 3 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வறுத்தால் போதும்.இதை ஒரு தட்டிருக்கு மாற்றி கொள்ளவும்.

2)பின்னர் அதே கடாயில் வர மிளகாய் 100 கிராம் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.இதை கொத்தமல்லி வறுத்து வைத்துள்ள அதே தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.

3)பின்னர் துவரம் பருப்பு,கடலைப் பருப்பு,புழுங்கலரிசி ஆகிய பொருட்களை ஒன்றாக சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுக்கலாம்.

4)பிறகு சீரகம்,வெந்தயம்,கடுகு,மிளகு,கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து லேசாக மிதமான தீயில் வறுத்து எடுத்து கொள்ளவும்.வறுத்து வைத்துள்ள பொருட்களை நன்கு ஆறவிடவும்.

5)அவை ஆறியப்பின் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் குழம்புக்கு உபயோகிக்கும் மஞ்சள் தூள் 5 கிராம் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.

6)பின்னர் அரைத்து வைத்துள்ள பொடியை ஒரு தட்டில் கொட்டி ஆற விட வேண்டும்.பின்னர் இதை காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்து கொள்ளவும்.குழம்பு மிளகாய் தூள் இந்த முறையில் செய்தால் குழம்பு மிகவும் சுவையாகவும்,அதிக வாசனையுடனும் இருக்கும்.