Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி ஸ்மார்ட்போனில் இரத்த அழுத்தத்தை கண்காணிக்கலாம்! புதிய வசதி கொண்ட சாதனம் கண்டுபிடிப்பு!!

#image_title

இனி ஸ்மார்ட்போனில் இரத்த அழுத்தத்தை கண்காணிக்கலாம்! புதிய வசதி கொண்ட சாதனம் கண்டுபிடிப்பு!

நம் உடலில் இருக்கும் இரத்த அழுத்தத்தை ஸ்மார்ட் போன் மூலமாக கண்காணிக்க புதிய வசதி உள்ள ஒரு சாதனத்தை அமெரிக்காவை சேர்ந்த  விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் ஃபிளாஸ் லைட்டை பயன்படுத்தி உடலில் இருக்கும் இரத்த அழுத்தத்தின் அளவை கண்காணிக்க குறைந்த விலை உடைய கிளிப்பை அமெரிக்காவின் சான்டியாகோ பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கிளிப் 3டி அச்சிடப்பட்ட இணைப்பு ஆகும். இதை ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் ஃபிளாஸ் மீது பொருத்த வேண்டும். இரத்த அழுத்தத்தை அளவிட விரும்பும் பயனர் அந்த கிளிப்பை அழுத்த வேண்டும். அவ்வாறு அந்த கிளிப் அழுத்தும் பொழுது போனின் ஃபிளாஸ் லைட் விரல் நுனியில் ஒளிரும். பின்னர் இரத்த அளவீட்டை இது காட்டும்.

இந்த கிளிப்பை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் “இந்த புதிய தொழில்நுட்பம் வயதானவர்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் மிகவும் பயன் அளிக்கும். இரத்த அழுத்தத்தை கண்காணிக்க குறைந்த விலையால் ஒரு அருமையான தீர்வை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த சாதனம் மற்ற இரத்த அழுத்த அளவீட்டு கருவிகளை விட வேறுபட்டது. ரத்த அழுத்தத்தை அளவிட விரல் நுனியில் இந்த கிளிப்பை அழுத்தினால் போதும் என்றனர்.

 

Exit mobile version