இனி லைக் போடவும் ட்வீட் போடவும் பணம் கட்ட வேண்டும்..!! எலான் மஸ்க் திடீர் அறிவிப்பு..!!
இனி எக்ஸ் தளத்தில் புதிய பயினர்கள் எக்ஸ் தளத்தில் லைக் செய்யவும், போஸ்டுகளுக்கு கருத்து பதிவிடவும், போஸ்டுகளை மறுட்வீட் செய்யவும் பணம் கட்ட வேண்டும் என்று எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் அவர்கள் அறிவித்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு எலான் மஸ்க் அவர்கள் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். அதன் பிறகு பெயரை எக்ஸ் என்று மாற்றிய எலான் மஸ்க் பல புதிய மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில் குறிப்பிட்ட சில அம்சங்களை பயன்படுத்த வேண்டும் என்றால் சந்தா கட்டும் முறையை கொண்டு வந்தார். எடுத்துக்காட்டாக முன்பு ட்விட்டராக எக்ஸ் தளம் இருந்த பொழுது ட்விட்டர் மூலமாக சம்பாதிக்க வேண்டும் என்றால் ஒரு சில வரம்புகளை அடைய வேண்டும். தற்பொழுது ட்விட்டர் எக்ஸ் தளமாக மாறிய பின்னர் அதாவது எலான் மஸ்க் வாங்கிய பின்னர் எக்ஸ் தளத்தில் இருந்து சம்பாதிக்கவே ஆண்டு சந்தா கட்டும் முறையை கொண்டு வந்தார். அதே போல தற்பொழுதும் எலான் மஸ்க் அவர்கள் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதாவது எக்ஸ் தளத்தில் இணையும் புதிய பயிர்களும் வருடாந்திர கட்டணம் செலுத்தும் நடைமுறையை எலான் மஸ்க் கொண்டு வரவுள்ளதாக தற்பொழுது அறிவித்துள்ளார்.
இதையடுத்து ஒரு புதிய பயனர் எக்ஸ் தளத்தில் இணைந்த பிறகு அவர்கள் புதிய பதிவை பதிவிடவும், பதிவுகளுக்கு லைக் செய்யவும், கமெண்ட் செய்யவும், ரீடுவீட் செய்யவும் புதிய பயனர்கள் சிறய வருடாந்திர கட்டணம் செலுத்த வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மேலும் எக்ஸ் வலைதளத்தில் பயன்படுத்தவும், மற்ற பயனர்களை பின்பற்றவும் எந்தவொரு கட்டணத்தையும் கட்டத் தேவையில்லை என்றும் எலான் மஸ்க் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் போலிக் கணக்குகளை கண்டறியவே இந்த நடைமுறை என்றும் இந்த சிறிய சந்தா வந்து மூன்று மாதங்கள் வரைக்கும் கட்ட வேண்டும் என்றும் அதற்கு பின்னர் புதிய பயனர்களும் இலவசமாக எக்ஸ் தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.