Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி நீங்களும் ஹீரோயின் போல ஜொலிக்கலாம்!! வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க!!

#image_title

இனி நீங்களும் ஹீரோயின் போல ஜொலிக்கலாம்!! வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க!!

சில பேர் பார்ப்பதற்கு மிகவும் பளிச்சென்று இருப்பார்கள். மெழுகு போல இவர்களின் சருமங்கள் பளிச்சென்று மின்னும்.

இவ்வாறு நம் சருமமும் வெள்ளையாக மெழுகு போல் மாற சிலவற்றை இங்கு தெரிந்துக் கொள்ளலாம்.

முதலில் தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வெயில் காலங்களில் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீரையாவது பருக வேண்டும்.

சாதாரண நாட்களில் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் தண்ணீரும் வெயில் காலங்களில் மூன்று லிட்டரில் இருந்து 4 லிட்டர் தண்ணீர் நிச்சயமாக குடிக்க வேண்டும்.

நாம் தண்ணீர் நிறைய பருகி வந்தால் நம் முகம் நன்றாக பிரகாசமளிக்கும்.

அடுத்து தினமும் பழச்சாறை குடித்து வரலாம் அதாவது ஆரஞ்சு, ஆப்பிள், கிர்ணி பழம், ஸ்ட்ராபெரி என்று தினமும் ஒரு ஜூஸ் பருகி வருவதால் நம் முகத்திற்கு ஜொலிப்பு உண்டாக்கும்.

முக்கியமான ஒன்று இந்த ஜூஸில் சர்க்கரை சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் சர்க்கரை அந்த ஜூஸில் உள்ள நல்ல தன்மையை எடுத்து விடும்.

சர்க்கரை இல்லாமல் குடிக்க இயலாதவர்கள் சிறிதளவு தேனை கலந்து குடித்து வரலாம்.

பழங்களில் போடக்கூடிய ஜூஸில் விட்டமின்கள் அதிகமாக இருப்பதால் இவை சருமத்திற்கு மிகவும் நல்லது.

அழகு சாதன பொருட்களில் க்ளிட்டரின் பவுண்டேஷன் ஷிம்மர் பவுண்டேஷன் என்று உள்ளது.

அதை சருமத்திற்கு நாம் போடும்போது பளிச்சென்று ஒரு லுக்கை தரும்.

அதுபோல இயற்கையாக நம் சருமத்திற்கு வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை பின் தொடர்ந்தாலே போதும் நம் சருமம் இயற்கையாகவே பளிச்சென்று ஜொலிக்க ஆரம்பித்து விடும்.

Exit mobile version