Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி மாதம் 1000 ரூபாய் அல்ல 2000 ரூபாய் கிடைக்கும்! தமிழக அரசு வெளியிடபோகும் அறிவிப்பு!!

Now you will get 2000 rupees instead of 1000 rupees a month! Tamil Nadu Government Announcement!!

Now you will get 2000 rupees instead of 1000 rupees a month! Tamil Nadu Government Announcement!!

 

தமிழகத்தில் மாதம் மாதம் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயை உயர்த்தி 2000 ரூபாயாக வழங்க தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட நலத்திட்டங்களையும் கூறப்படாத நலத்திட்டங்களையும் மக்களுக்காக செயல்படுத்தி வருகின்றது. விடியல் பயணம், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், கால்நடைகளுக்கு லோன், சுய வேலை வாய்ப்பு திட்டம் என்று பல நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது.

இவ்வாறு தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் பெண்களுக்காக தொடங்கப்பட்ட திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஆகும். இத்திட்டத்தின் மூலமாக ஏழை எளிய குடும்பத் தலைவிகளுக்கு தமிழக அரசு தற்பொழுது மாதம் மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மூலமாக தமிழக அரசு மாதம் மாதம் 1000 ரூபாயை பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்து வருகின்றது.

முதலில் இந்த திட்டம் தொடங்கப்பட்ட பொழுது நிபந்தனைகள் வைக்கப்பட்டது. அதன்படி தகுதி உள்ள பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டது. பின்னர் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு மேலும் பல குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது வரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலமாக 1 கோடியே 15 லட்சத்து 27172 பெண்கள் பயன்பெற்று வருகின்றனர்.

தமிழக அரசு தற்பொழுது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் உள்ள நிபந்தனைகளை நீக்கவும் இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்யவும் ஆலோசனை நடத்தி வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசு செயல்படுத்திய இந்த திட்டத்தை தற்பொழுது இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்த பிறகு முதல் திட்டமாக பெண்களுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதே போல தெலங்கானா மாநிலத்தில் பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது.

இதைப் போல ஹரியானா மாநிலத்தில் பெண்களுக்கு 2000 ரூபாயும் காஷ்மீர் மாநிலத்தில் பெண்களுக்கு 3000 ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் மற்ற மாநிலங்களில் வழங்கப்படுவது போல தமிழகத்தில் 2000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதையடுத்து தமிழக அரசு வழங்க வரும் 1000 ரூபாயை பெறுவதற்கு உண்டான விதிமுறைகளை தளர்த்தும் நோக்கில் தமிழக அரசு இருக்கின்றது. இந்நிலையில் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version