Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு மணி நேரத்தில் என் தவறை புரிந்து கொண்டேன்! இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்! மன்னிப்பு கேட்ட சீமானின் தம்பி!

ஒரு மணி நேரத்தில் என் தவறை புரிந்து கொண்டேன்! இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்! மன்னிப்பு கேட்ட சீமானின் தம்பி!

ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அவரது போட்டோவிற்கு முன்பு நின்று கொண்டு சீமான் பேசிய வசனத்தை நாதகவின் சாட்டை துரைமுருகன் என்பவர் பேசியது பெரும் சர்ச்சையானது.

இதனையடுத்து காவல்நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் கொடுத்தனர். இந்த வீடியோ தொடர்பாக வருத்தம் தெரிவித்து புதிய வீடியோவை துரைமுருகன் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது;

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் நான் விளையாட்டாக ஒரு டிக்டாக் பேசி சமூக வலைதளத்தில் பதிவு செய்தேன். பின்னர், நான் செய்தது தவறு என்று ஒரு மணி நேரத்தில் இணையத்தில் பதிவேற்றிய வீடியோவை நீக்கிவிட்டேன். அந்த ஒரு மணி நேரத்தில் பலர் நான் பேசிய வீடியோவை டவுன்லோடு செய்து சமூகவலைதளங்களில் பரப்பி விட்டுள்ளதாக கூறினார்.

மேலும், நான் அப்படி செய்தது தவறுதான் இனிமேல் அப்படி செய்யமாட்டேன் இதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். இதுபோன்ற மன்னிப்பு சம்பவங்களை அரசியல் கட்சியினரிடையே மிகவும் சாதாரணமாகிவிட்டது. நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பல்வேறு குற்றங்களை இணையத்தில் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version