Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காலமான சீமானின் தந்தை! சோகத்தில் சீமான் ஆதரவாளர்கள்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தகப்பனார் செந்தமிழன் இவர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கின்ற அரணையூரில் வசித்து வந்த இவர் வயது மூப்பு காரணமாக, சென்ற சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.

இவ்வாறான சூழலில் இன்று அவர் உடல்நலக்குறைவு காரணமாக, இயற்கை எய்தினார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. அவருடைய மறைவு சீமானுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் பிரமுகர்கள் பலரும் தங்களுடைய இரங்கலை பதிவு செய்து வருகிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரையில் மக்களிடையே தமிழ் உணர்வு ரீதியாக பிரச்சாரத்தை மேற்கொண்டு மக்களிடையே தனி வழியை உபயோகம் செய்து கொண்டு வளர்ந்து வந்த சீமானின் தந்தையின் மறைவு மக்களிடையே சோகத்தை உண்டாக்கியிருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version