சபரிமலைஅய்யப்பன் கோவில் கேரளா மாநிலத்தில் சபரிமலை என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
வருடந்தோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் முதல் தை மாதம் முதல் நாள் வரை, ஏறத்தாழ இலட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு, விரதமிருந்து, இருமுடி கட்டி, சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். மலையாள மாதப் பிறப்பின் முதல் ஐந்து நாட்களும், விஷூ அன்றும் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை கோவிலுக்கு உள்ளே பூஜை செய்யும் அதிகாரம் தந்திரிகளிடமும், கோவிலுக்கு வெளியே கோவில் நிவாக அதிகாரம் திருவாங்கூர் தேவஸ்தானம் குழுவிடமும் உள்ளது.
இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அரவணை மற்றும் அப்பம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
மண்டல பூஜை:
கார்த்திகை மாதம் முதல் நாள் தொடங்கி 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறும். அந்த 48 நாட்களுக்கு தினமும் காலை 4.30 மணிக்கு மண்டலா பூஜை நடக்கும். பூஜையில் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும். மண்டல பூஜை முடிவடவதையொட்டி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். அதோடு கோவில் நடை சாத்தப்படும். அதன் பிறகு 2 நாட்கள் கழித்து மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்படும்.
மகர விளக்கு பூஜை:
இந்து புராணத்தின்படி, ஒரு முறை இலக்குவனுடன் ராமன் சபரிமலை காட்டிற்கு வரும் போது சபரி எனும் சந்திக்கிறார். சபரி இராமருக்கு வழங்கிய காய் கனிகளை ஏற்றுக் கொள்கிறார். பின் அங்கு இளைய தவசியைக் கண்டு சபரியிடம் தவசியை யார் எனக் கேட்டதற்கு, இவர்தான் தர்மசாஸ்தா என உரைக்க, இராமர் தவசியிடம் செல்கிறார், அப்போது தவசியான அய்யப்பன் இராமரை வரவேற்றார். இந்நிகழ்வானது ஆண்டுதோறும் மகரவிளக்கு அன்று சபரிமலையில் இன்றும் கொண்டாடப்படுகிறது. மகரவிளக்கு அன்று அய்யப்பன் தன் தவத்தை நிறுத்தி, தன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இந்த ஆண்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி திறக்கப்படுகிறது.
திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிக்கை:
இந்த ஆண்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி திறக்கப்படுகிறது. 17-ந் தேதி முதல் நாள்தோறும் 25 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். சான்றிதழ் இல்லா பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.