காவல் நிலையத்தில் நிர்வாண நடனமா? ஆட வைத்த பெண் போலீஸ்காரிகள்! எல்லை மீறும் போலீஸ் அராஜகம்!
போலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வந்த பெண் ஒருவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் அதுவும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அவரை மிரட்டி அங்குள்ளோர் முன் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக, அவர்கள் முன்னிலையிலேயே நடனமாட வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள குவெட்டா நகரில்ஜின்னா டவுன் போலிஸ் நிலையத்தின் அருகே உள்ள குடியிருப்பு வளாகத்தில் குழந்தை ஒன்று கொலை செய்யப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக பெண்ணொருவரை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணை என்ற பெயரில் அந்தப் பெண்ணிடம் இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத் மற்றும் போலீசார் அந்த பெண்ணை அங்கு அழைத்து வந்தனர். விசாரணை என்ற பெயரில் அந்த பெண்ணை மிரட்டி அவரின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி அதனுடன் பாடல் ஒன்றையும் ஒலிக்கச் செய்து அங்கிருந்தவர்கள் முன்னிலையில் நிர்வாணமாக அவரை நடனமாடவும் வைத்திருந்தனர்.
மேலும் இந்த சம்பவத்தையும் அவர்கள் வீடியோவாகவும் பதிவு செய்து வைத்தனர். இந்த விவகாரம் குறித்து போலீஸ் துணை ஐஜி முகமது அசாருக்கு புகார் சென்றது. எனவே துணை காவல் கண்காணிப்பாளர் பார் குல் தாரின் என்பவரை சிறப்பு காவல் அதிகாரியாக நியமித்து இந்த புகார் குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் தெரிவித்தார். அந்த சிறப்பு அதிகாரியின் விசாரணையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத் விசாரணைக்காக அழைத்து வந்த பெண்ணை நிர்வாணமாக்கி நடனம் ஆட வைத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டு இருப்பதாகவும், போலீஸ் துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், தெரிவித்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத் உடனடியாக பணி நீக்கம் செய்து, காவல்துறை நிரந்தர கட்டாய ஓய்வு தந்துள்ளது. மேலும் விசாரணைக்கு அழைத்துவந்து லாக்கப்பில் பெண்ணை சித்ரவதை செய்த இந்த விவகாரத்தில் புஷ்ரா அப்சல், ஹூமா பைசல், உஸ்மா நஸ்ரின், பாரா கலீல் மற்றும் சமீனா மன்சூர் என ஐந்து பெண் போலீசாரையும் பணியில் இருந்து நீக்கியுள்ளனர்.