வெயிலால் காய்ந்து போன உங்கள் உடலை குளுமையாக்கும் நுங்கு பால்!! இதை எவ்வாறு தயாரிப்பது?
நம் தமிழ்நாட்டில் அதிகளவு விளையும் உணவுப் பொருளில் ஒன்று நுங்கு.இவை கோடை காலத்தில் தான் அதிகம் விளைச்சலுக்கு வருகிறது.இந்த நுங்கை சாப்பிட்டு வந்தால் அம்மை,உடல் உஷ்ணம்,வாந்தி,வெப்ப நோய்,வயிறு தொடர்பான நோய் ஆகியவை சரியாகும்.
குளிர்ச்சி நிறைந்த நுங்கில் சுவையான நுங்கு பால் தயார் செய்து குடித்து வந்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)நுங்கு
2)வெள்ளை சர்க்கரை
3)பாதாம் பிசின்
4)காய்ச்சாத பசும் பால்
5)சப்ஜா விதை
6)ஐஸ்கட்டி
செய்முறை:-
ஒரு கப் காய்ச்சாத பசும் பாலில் ஒரு தேக்கரண்டி பாதாம் பிசின் சேர்த்து ப்ரிட்ஜில் ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
அதன் பின்னர் 1/2 தேக்கரண்டி சப்ஜா விதையை ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
பிறகு 10 நுங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.ஒரு மணி நேரம் கழித்து ப்ரிட்ஜில் வைத்துள்ள பாலை வெளியில் எடுத்து தேவையான அளவு வெள்ளை சர்க்கரை சேர்த்து ஒரு முறை கலந்து கொள்ளவும்.
பின்னர் நறுக்கிய நுங்கு மற்றும் ஒரு துண்டு ஐஸ்கட்டியை அதில் போட்டு கலந்து குடித்தால் உடல் சூடு முழுமையாக தணியும்.