Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Nungu sarbath: அடிக்கிற வெயிலுக்கு குளுகுளுனு நுங்கு சர்பத் குடிங்க.. எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம்..!

Nungu sarbath

#image_title

Nungu sarbath: கோடைக்கால வெயில் அனைவரையும் வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது என்று தான் கூறவேண்டும். எந்த ஆண்டும் இல்லாத வெயில் இந்தாண்டு அதிகமாக உள்ளது. வெப்ப அலை வீசும் என்பதால் அவ்வப்போது வானிலை ஆய்வு மையமும் மக்களை வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை கொடுக்கிறது. இந்நிலையில் இந்த கோடைக்கால வெயிலில் இருந்து உடலை குளிர்ச்சியடைய செய்ய மக்கள் பழங்கள், ஜூஸ் (Best Summer Juice Recipe in Tamil) ஆகியவற்றை தயார் செய்து குடித்து வருகிறார்கள். அந்த வகையில் ஆரோக்கியமான, கோடைக்காலத்தில் மட்டும் அரிதாகவே கிடைக்கும் பழம் தான் நுங்கு.  இந்த நுங்கு வைத்து சர்பத் செய்வது எப்படி என்று இந்த பதிவில் (How to Make Palm Fruit Drink) பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

செய்முறை

முதலில் நுங்குயில் உள்ள தோல் பகுதியை உரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் சர்பத் கசக்கும். தோல் பகுதியை நீக்கிவிட்டு ஒரு கிண்ணத்தில் நுங்கு சேர்த்து நன்றாக பிசைந்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் மிக்ஸி சாரில் போட்டு ஒரு முறை மட்டும் அடித்து வைத்து கொள்ளவும். அதனை ஒரு கிளாஸில் ஊற்றி, அதனுடன் நன்னாரி சிரப், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் தேவையான அளவு ஐஸ் கட்டி சேர்த்தால் எளிமையான சுவையான நுங்கு சர்பத் தயார்.

நுங்கில் உள்ள சத்துக்கள் – Nungu sarbath

இந்த நுங்கு குறிப்பாக கோடைக்காலத்தில் மட்டும் கிடைக்க கூடிய பழமாகும். அதிலும் தென்னிந்தியாவில் இது அதிகமாக கிடைக்கும். கோடைக்கால வெயிலுக்கு சிறந்த பழம் என்று தான் கூற வேண்டும். இந்த பழம் உடலை குளிர்ச்சியடைய செய்யும். இந்த பழம் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

Nungu sarbath

நுங்கில் குறைந்த கலோரிகள் உள்ளது. இதில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி, ஏ, ஈ, கே காணப்படுகிறது. இந்த நுங்கில் கால்சியம் சத்து காணப்படுகிறது. மேலும் இதில் துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. கோடைக்காலத்தில் இந்த பழத்தை உண்டால் உடல் குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

Exit mobile version