பிறந்த 14 நாட்களே ஆன குழந்தைக்கு செவிலியர் செய்த கொடுமை! தஞ்சையில் நடந்த அவலம்!
தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். விவசாய கூலி தொழிலாளியான இவருக்கும் பிரியதர்ஷினி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு கடந்த 25-ம் தேதி தஞ்சை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை 9 மாதத்திலேயே பிறந்ததாலும் குழந்தைக்கு வயிற்று பிரச்சனை இருந்ததாலும் தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே கடந்த 25-ம் தேதி முதல் குழந்தைக்கு குளூக்கோஸ் ஏற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில் குழந்தை நலமுடன் இருப்பதாக கூறிய மருத்துவர்கள் தாயை சேயையும் வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று தெரிவித்தனர். வீடு திரும்புவதால் குழந்தையின் கையில் இருந்த ஊசியை அகற்றுமாறு செவிலியரிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் செவிலியரோ கவனக்குறைவாக கையில் இருந்த ஊசிக்கு பதில் கட்டை விரலை கத்திரிக்கோலால் வெட்டியுள்ளார்.
குழந்தையின் கட்டை விரல் வெட்டப்பட்டது குறித்து மருத்துவமனை எந்த விளக்கமும் தரவில்லை என கணேசன் புகார் தெரிவித்துள்ளார். இந்த செவிலியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கட்டை விரல் செவிலியரின் அலட்சியத்தால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற கவன குறைவான செயலால் செவிலியர்களுக்கு கிடைக்கும் நர்பெயரே போய் விடுகிறது. நாளை கட்டு பிரித்து பார்க்கலாம் என்று மட்டுமே கூறுவதாகவும், தற்போது அந்த விரலை வைத்து ஊசி குத்தி வைத்து இருப்பதாக அந்த குழந்தையின் தந்தையும், பாட்டியும் கவலை தெரிவித்து உள்ளனர்.