Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை குண்டுகட்டாக தூக்கி சென்ற காவல்துறையினர்!

நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் ஊடுருவி தேதியில் இருந்து தற்போது வரையில் அதனை கடுமையாக எதிர்த்து போராடிக் கொண்டிருப்பவர்கள் முன் களப்பணியாளர்கள் என்று அழைக்கப்படும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டவர்கள் தான் இன்னும் சொல்லப்போனால் நாட்டு மக்களின் உயிரை தன் உயிரை பணயமாக வைத்து பாதுகாத்து வருபவர்கள் இந்த மருத்துவர்களும், செவிலியர்களும்.

நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சமயத்தில் அந்த பாதுகாப்பு உடையைப் போட்டுக் கொண்டு தண்ணீர் அருந்துவதற்கு கூட வழியில்லாமல் மருத்துவம் பார்த்து நோயாளிகளை குணப்படுத்துவது இந்த செவிலியர்களும், மருத்துவர்களும் தான்.

ஆகவேதான் நோய்த்தொற்று பரவலுக்கான தடுப்பூசியை இந்தியா முதன்முதலில் உருவாக்கிய போது அதை செலுத்தி கொள்வதில் முன் களப்பணியாளர்கள் ஆன மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளித்தது மருத்துவத்துறை பொதுமக்களுக்கு தன்னலம் இல்லாமல் சேவையாற்றும் ஒரு துறையாக தான் இதுவரையிலும் இருந்து வருகிறது என்பதற்கு ஒரு சான்றாக தற்போது முன் களப்பணியாளர்கள் ஆக விளங்கும் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர் விளங்கி வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் மூன்று கட்டங்களாக தற்காலிக அடிப்படையில் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். 2019ஆம் ஆண்டு மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையத்தின் எம் ஆர் பி மூலமாக நடத்தப்பட்ட தேர்வு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், இவர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள், இவர்களில் இரண்டாம் கட்ட பணி நியமனம் செய்யப்பட்ட 3485 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், திமுக அதனுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தற்காலிக பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று தெரிவித்து நேற்று காலை முதல் டிஎம்எஸ் வளாகத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்திருந்த சுமார் 800க்கும் அதிகமான செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் இறங்கினார்கள்.

தற்காலிக அடிப்படையில் பணியில் நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கு மாத ஊதியம் 14 ஆயிரம் மற்றும் தங்குமிடம், உணவு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால் தற்சமயம் ஒரு சில மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்டவை வழங்குவது நிறுத்தப்பட்டது என்று தெரிவித்திருக்கின்றார்கள் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோஷம் போட்டார்கள்.

அதன்பின்னர் செவிலியர்கள் சங்க நிர்வாகிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். ஆனாலும் செவிலியர்கள் போராட்டத்தை கைவிடுவதாக தெரியவில்லை. இந்த சூழ்நிலையில், நேற்று இரவு போராட்ட களத்திற்கு வருகைதந்த நூற்றுக்கும் அதிகமான காவல்துறையை சேர்ந்தவர்கள் செவிலியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி இருக்கிறார்கள், இதன் காரணமாக, செவிலியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் குதித்தார்கள்.

இந்தப் போராட்டத்தின் சமயத்தில் 5 செவிலியர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு உண்டானது. அதன்பின்னர் அவர்கள் அவசர ஊர்தி மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையில் சில செவிலியர்கள் நள்ளிரவு வரையில் போராட்டத்தில் இறங்கியிருந்தார்கள். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்கள், முன்னதாக செவிலியர்கள் போராட்டத்தில் பங்கேற்று கொண்டு மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் ஆதரவு தெரிவித்து இருக்கிறார் அவர்களை காவல்துறையினர் வெளியேற்றும் காட்சி சமூக வலைதளங்களில் வயதானதால் அவர்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

Exit mobile version