Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

B.Sc Nursing,GNM படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு!

மத்திய அரசின் மிகப்பெரிய துறையான ரயில்வேத் துறையில் வேலைவாய்ப்பு. தற்போது தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 32 காலி பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.44 ஆயிரம் வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : தெற்கு ரயில்வே

மேலாண்மை : மத்திய அரசு

பணியின் பெயர் : செவிலியர்

மொத்த காலிப் பணியிடம் : 32

பணியிடம் : திருச்சி

கல்வித் தகுதி : B.Sc Nursing, GNM (Dipoloma in General Nursing & Midwifery)

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.44,900 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை 14.08.2020 தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விபரங்களை அறிய, விண்ணப்பப் படிவத்தினைப் பெற https://sr.indianrailways.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

Exit mobile version