தேமல் படை அம்மை கொப்பளங்களை குணமாக்கும் ஜாதிக்காய் பசை!! தயார் செய்வது எப்படி?

0
69
Nutmeg paste that cures measles blisters by Themal Force!! How to prepare?

நம் உணவுகளில் சேர்க்கப்படும் ஜாதிக்காய் ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்ட மூலிகையாகும்.ஜாதிக்காயை பொடியை பாலில் கலந்து பருகி வந்தால் அம்மை,ஆண்மை குறைபாடு போன்றவை சரியாகும்.

தேமலை குணமாக்கும் ஜாதிக்காய்

தேவையான பொருட்கள்:

1)ஜாதிக்காய் – ஒன்று
2)தண்ணீர் – சிறிதளவு

செய்முறை விளக்கம்:

*முதலில் ஒரு ஜாதிக்காயை எடுத்து உரலில் போட்டு இடிக்க வேண்டும்.அதன் பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு நன்றாக அரைக்க வேண்டும்.

*இந்த ஜாதிக்காய் பேஸ்டை தேமல் மீது பூசி வந்தால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.

சொறி சிரங்கு படையை குணமாக்கும் ஜாதிக்காய்

தேவையான பொருட்கள்:

1)ஜாதிக்காய் – ஒன்று
2)பசும் பால் – சிறிதளவு

செய்முறை விளக்கம்:

*ஜாதிக்காய் ஒன்றை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

*பிறகு அதில் சிறிதளவு காய்ச்சாத பசும் பால் சேர்த்து நன்கு கலந்து சொறி சிரங்கு உள்ள இடத்தில் பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.

அம்மையை குணமாக்கும் ஜாதிக்காய்

தேவையான பொருட்கள்:

1)ஜாதிக்காய் பொடி – ஒரு தேக்கரண்டி
2)சீரகம் – கால் தேக்கரண்டி
3)சுக்கு – ஒரு பின்ச்

செய்முறை விளக்கம்:

மேலே குறிப்பிட்டுள்ள இந்த மூன்று பொருட்களையும் சொல்லிய அளவுபடி எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

பிறகு இந்த பொடியில் சிறிது தண்ணீர் விட்டு பிணைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி உணவு உட்கொள்வதற்கு முன் சாப்பிட்டு வந்தால் மூன்று தினங்களில் அம்மை குணமாகும்.

ஆண்மையை அதிகரிக்கும் ஜாதிக்காய்

தேவையான பொருட்கள்:

1)ஜாதிக்காய் – ஒன்று
2)பசும் பால் – ஒரு கிளாஸ்
3)நெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

அடுப்பில் வாணலி வைத்து நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு ஜாதிக்காயை உடைத்து அதில் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.

பின்னர் இதை ஆறவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடாக்க வேண்டும்.

பிறகு அரைத்த ஜாதிக்காய் பொடியை அதில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து பருகினால் ஆண்மை அதிகரிக்கும்.