மூக்கு சளியை கரைத்து வெளியேற்றும் ஜாதிக்காய் டீ!! இந்த பொருளையும் சேர்த்துக்கோங்க!!

0
85
Cold Treatment using Jathikai

குளிர்காலங்களில் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் நமக்கு பெரும் தொல்லை தரும் பாதிப்பாக இருக்கின்றது.இதை ஜாதிக்காய் குடித்து குணமாக்கி கொள்ளலாம்.

 

ஜாதிக்காய் சளியை கரைக்கும் மூலிகையாகும்.இதை பொடியாக்கி தேயிலை தூள்,இஞ்சி உள்ளிட்ட பொருட்களை சேர்த்து டீ செய்து பருகினால் சளிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

 

தேவையான பொருட்கள்:

 

1)ஜாதிக்காய் – ஒன்று

2)இஞ்சி – ஒரு துண்டு

3)தேயிலை தூள் – ஒரு தேக்கரண்டி

4)பால் – ஒரு கப்

5)பனங்கற்கண்டு – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம்:

 

முதலில் ஜாதிக்காயை அரைத்து பொடியாக்கி கொள்ளுங்கள்.இந்த ஜாதிக்காய் நாட்டு மருந்து கடையில் பொடியாகவும் கிடைக்கும்.

 

ஜாதிக்காயை லேசாக வறுத்து மிக்ஸர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.பிறகு இரு துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

 

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் அளவிற்கு பசும் பால் ஊற்றி சூடுபடுத்தவும்.அதற்கு அடுத்து அரைத்த ஜாதிக்காய் பொடி மற்றும் இடித்த இஞ்சி சாறு சேர்த்துக் கொள்ளுங்கள்.

 

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேயிலை தூள்,தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வையுங்கள்.இந்த ஜாதிக்காய் டீயை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் நெஞ்சு சளி கரைந்துவிடும்.

 

தேவையான பொருட்கள்:

 

1)சின்ன வெங்காயம் – இரண்டு

2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

3)தேன் – ஒரு தேக்கரண்டி

 

செய்முறை விளக்கம்:

 

முதலில் இரண்டு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.

 

பிறகு ஒரு கிளாஸில் வெதுவெதுப்பான நீர் ஊற்றி இடித்த வெங்காய சாறு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

 

அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி பருகினால் சளி தொல்லை நீங்கும்.