தேயிலையில் தயாரிக்கப்பட்ட டீ அனைவருக்கும் பிடித்த பானமாக இருக்கின்றது.இந்த பானம் உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் என்றாலும் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தை தயார் செய்து குடிக்கவும்.
தேவையான பொருட்கள்:
1)ராகி – 3 தேக்கரண்டி
2)கம்பு – 3 தேக்கரண்டி
3)தேயிலை தூள் – 1/2 தேக்கரண்டி
4)இஞ்சி – ஒரு துண்டு
5)பட்டை – ஒரு துண்டு
6)ஏலக்காய் – இரண்டு
7)நாட்டு சர்க்கரை – நான்கு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கிண்ணத்தில் மூன்று தேக்கரண்டி ராகி மற்றும் மூன்று தேக்கரண்டி கம்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி 8 மணி நேரத்திற்கு ஊறவிடவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பிறகு ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி இடித்துக் விட்டு உரலில் போட்டு இடித்து கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.
பிறகு ஒரு தேக்கரண்டி தேயிலை தூள்,ஒரு துண்டு பட்டை,இரண்டு இடித்த ஏலக்காய் மற்றும் நான்கு தேக்கரண்டி நாட்டு சர்க்கரை சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்கவும்.
பிறகு மற்றொரு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அரைத்த ராகி கம்பு பாலை ஊற்றி மிதமான தீயில் இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.இந்த பாலை மற்றொரு அடுப்பில் கொதித்து கொண்டிருக்கும் நீரில் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டினால் ஆரோக்கியமான மற்றும் சுவையான தேநீர் தயார்.இதை தினமும் காலை மற்றும் மாலை என இருவேளை குடித்து வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.