உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்து டானிக் – தயார் செய்வது எப்படி?
நோயற்ற வாழ்வு குறைவற்ற செலவம் என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்தல் மிகவும் முக்கியம். உடலில் எவ்வித நோய்களும் அண்டாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஆரோக்கியம் நிறைந்த காய்கறிகள், பழங்களை சாப்பிடுதல் போன்றவற்றால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.
அதுமட்டும் இன்றி சில இயற்கை பொருட்களை பயன்படுத்தி சத்து டானிக் செய்து சாப்பிட்டு வருவதன் மூலமும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும்.
தேவையான பொருட்கள்…
*பப்பாளி இலை
*நெல்லிக்காய்
*வல்லாரை
*கற்றாழை
*ஓமம்
*வெந்தயம்
*தேன்
செய்முறை…
ஒரு மிக்ஸி ஜாரில் 1 பப்பாளி இலை(நறுக்கியது), 2 நெல்லிக்காய்(விதை நீக்கியது), வல்லாரை 1/4 கைப்படி அளவு, கற்றாழை ஜெல் 3 தேக்கரண்டி, ஓமம் 1 தேக்கரண்டி, வெந்தயம் 1 தேக்கரண்டி அளவு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.
பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி அதில் சிறிது தேன் கலந்து குடித்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
சத்து டானிக் பயன்கள்…
*இரத்த செல்கள் அதிகரிக்கும்
*உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்
*எலும்பு வலிமையாகும்
*கண் பார்வை தெளிவாகும்
*உடலில் உள்ள தொற்று கிருமிகள் அழியும்