குழந்தைகளுக்கு எமனாக மாறிய சத்துணவு! எச்சரிக்கை விடுத்த மருத்துவர்!

0
140
Nutrition for children! The doctor who warned!

குழந்தைகளுக்கு எமனாக மாறிய சத்துணவு! எச்சரிக்கை விடுத்த மருத்துவர்!

தற்போதைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு கல்வி மிகவும் முக்கியமான ஒன்று.பாமர மக்கள் கூட தங்களது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று முன்வந்துள்ளனர்.அவர்கள் தனியார் பள்ளியில் பணம் கட்டி படிக்க வைக்க முடியா காரணத்தினால்,அரசு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்து வருகின்றனர்.அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கம் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.அந்தவகையில் மாணவர்கள் தங்கள் புத்தகங்களை எடுத்து செல்ல உதவியாக ஸ்கூல் பேக்,இலவச நோட்டு புத்தகங்கள்,சீருடைகள்,செருப்பு போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி மாணவர்கள் வீட்டில் இருந்து உணவு எடுத்து வர முடியாதவர்களுக்கு அனைத்து அரசு மற்றும் அரசு சார்த்த பள்ளிகளில் சத்துணவு திட்டம் செயல்பட்டு வருகிறது.இந்த சத்துணவு திட்டத்தின் மூலம் பல ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.அவ்வாறு மாணவர்களுக்கு மதிய நேரங்களில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.சில நேரங்களில் இந்த சத்துணவு,குழந்தைகளுக்கு எமனாக மாறிவிடுகிறது.சத்துணவில் வேலை செய்யும் சிலர் தங்களுக்கு வழங்கப்படும் பொருள் பழையது என்று தரம் பார்க்காமல் குழந்தைகளுக்கு சமைத்து கொடுத்துவிடுகின்றனர்.

இதனால் சத்துணவு சாப்பிடும் சில குழந்தைகள் வாந்தி, மயக்கம் போன்றைவை ஏற்பட்டு மருத்தவமனையில் அனுமதிக்கும் சூழல் நிலவுகிறது.சில நேரங்களில் சில குழந்தைகளை தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கும் நிலையம் வந்துவிடுகிறது.அது அனைத்தும் அங்கு பணி புரிபவரின் கவனக்குறைவால் நடக்கிறது.இதில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தினந்தோறும் முட்டை வழங்குவது வழக்கம்.அதேபோல தற்பொழுது சிதம்பரத்தில் திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது.சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் என்ற பகுத்து உள்ளது.அங்கு ஓர் துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.அந்த பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பயின்று வருகின்றனர்.அந்த சிறுவர்களில் பலர் மதியம், பள்ளியில் வழங்கப்படும் சத்துணவை உண்பவர்கள்.

அவ்வாறு சிறுவர்கள் வழக்கம் போல் சத்துணவை உண்ணுவிட்டு வகுப்பறைக்கு சென்றுள்ளனர்.சென்ற சிறிது நேரத்திலேயே சத்துணவை சாப்பிட்ட சில சிறுவர்கள் மயங்கி விழ ஆரம்பித்துள்ளனர்.சிலர் வாந்தி எடுத்துள்ளனர்.பாதிக்கப்பட்ட சிறுவர்களை, பள்ளி நிர்வாகம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளது.சிறுவர்களை சோதித்த மருத்துவர் இவர்கள் சாப்பிட்ட உணவினால் தான் இவர்கள் மயங்கி விழுந்துள்ளனர்.அதனை சோதனை செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.பின்பு சோதனை செய்து பார்த்ததில் குழந்தைகள் மதிய சாப்பிட்ட உணவில் எடுத்துக்கொண்ட முட்டை தரமற்றது என்பது தெரியவந்துள்ளது.இந்த சூழலால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.