மூக்கில் ஒழுகும் சளியை மூன்று நிமிடத்தில் சரி செய்யும் “சத்து டானிக்”!! இதை எப்படி தயாரிப்பது?

0
144
"Nutrition Tonic" that cures runny nose in three minutes!! How to prepare it?

மூக்கில் ஒழுகும் சளியை மூன்று நிமிடத்தில் சரி செய்யும் “சத்து டானிக்”!! இதை எப்படி தயாரிப்பது?

உங்களுக்கு சளி பாதிப்பு ஏற்பட்டால் தாமதிக்காமல் இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சிக்கவும்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு மிளகு
2)தேன்
3)சுக்கு பொடி

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 2 தேக்கரண்டி கரு மிளகு சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு இதை ஒரு தட்டிற்கு மாற்றி விட்டு அதே வாணலியில் ஒரு துண்டு சுக்கு சேர்த்து வறுக்கவும்.

இந்த இரண்டு பொருளையும் தனித்தனியாக அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

பின்னர் ஒரு கிண்ணத்தில் இந்த பொடிகளையும் போட்டு கலந்து விடவும்.அதன் பிறகு அதில் 6 தேக்கரண்டி தூயத் தேன் சேர்த்து கலக்கவும்.இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூக்கில் அதிகளவு சளி ஒழுகுதல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)துளசி
2)கற்பூரவல்லி
3)தேன்

செய்முறை:-

15 துளசி இலை 2 கற்பூரவல்லி இலையை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.இந்த சாற்றில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் சளி தொல்லைக்கு நிமிடத்தில் தீர்வு கிடைத்து விடும்.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம்
2)மிளகு
3)தூதுவளை
4)பூண்டு
5)உப்பு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி சீரகம்,மிளகு,ஒரு பல் நறுக்கிய பூண்டு சேர்க்கவும்.பின்னர் 4 அல்லது 5 தூதுவளை இலையை நறுக்கி சேர்க்கவும்.இதை நன்கு கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.பிறகு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து கலந்து குடிக்கவும்.இவ்வாறு செய்வதால் நுரையீரலில் தேங்கி கிடந்த சளி முழுவதும் வெளியேறி விடும்.