சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் கேசரி! எவ்வாறு செய்வது என்று பாருங்க!
நம்முடைய உடலுக்கு பலவித நன்மைகளை தரக்கூடிய உணவுப் பொருட்களில் மண்ணுக்கு அடியில் விளையக் கூடிய கிழங்கு வகைகளும் பெரிதாக உதவியாக இருக்கின்றது.அந்த வகையில் மண்ணுக்கு அடியில் இருந்து கிடைக்கும் பீட்ரூட் நமக்கு பலவிதமான நன்மைகளை தருகின்றது.
பீட்ரூட் நமது உடலில் இரத்தத்தின் உற்பத்தியை அதிகரிக்கின்றது.பீட்ரூட் நம்முடைய சருமத்திற்கு பல நன்மைகளை தருகின்றது.பீட்ரூட்டை நாம் நம்முடைய உதடுகளை இயற்கையாகவே சிவப்பாக மாற்ற பயன்படுத்தலாம்.மேலும் இதில் பல சத்துக்கள் இருக்கின்றது.இதில் எவ்வாறு கேசரி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* பீட்ரூட் – ஒன்று
* சேமியா – ஒரு கப்
* சர்க்கரை – அரை கப்
* பால் – ஒன்றரை கப்
* நெய் – கால் கப்
* முந்திரி – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பீட்ரூட்டை கழுவி அதை சிறிது சிறிதாக அறுத்து மிக்சியில் போட்டு அரைத்து அதிலிருந்து பீட்ரூட் சாறு மட்டும் எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ள வேண்டும்.அதில் கடாய் ஒன்றை வைத்து அதில் ஒன்றரை கப் அளவு பால் சேர்த்துக் கொண்டு சேமியாவையும் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
சேமியா வெந்த பின்னர் அதில் பீட்ரூட் சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர். அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.பீட்ரூட் சாறு மற்றும் பால் வற்றியதும் சேமியாவை கிளறி அதை இறக்கி வைத்து விட வேண்டும்.
மற்றொரு சிறிய கடாய். அல்லது பேனில் சிறிதளவு நெய் சேர்த்து அதில் எடுத்து வைத்துள்ள முந்திரி சேர்த்து வறுத்து பின்னர் இதை கேசரியில் போட்டு கிளறினால் சுவையான சத்து மிகுந்த பீட்ரூட் கேசரி தயார்.