Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஐந்து முதல் பத்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள்!!

நம் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மேம்பட அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கொடுத்து வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.குழந்தைகள் உட்கொள்ளும் உணவில் அனைத்துவிதமான ஊட்டசத்துக்களும் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான விஷயமாகும்.

குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடும்.ஊட்டச்சத்து குறைபாடு என்பது குழந்தைகளின் உடல் மட்டுமின்றி மனதையும் கடுமையாக பாதிக்கிறது.குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள் என்று அவர்களுக்கு பிடித்த உணவுகளை மட்டும் கொடுத்து பழக்கினால் ஆரோக்கிய உணவுகள் மீதான நாட்டம் முற்றிலும் குறைந்துவிடும்.குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை செய்து கொடுத்து அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

தற்பொழுது 5 முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு என்ன மாதிரியான ஆரோக்கிய உணவு கொடுக்கலாம் என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.குழந்தைகளின் தினசரி உணவில் கால்சியம்,பொட்டாசியம்,புரதம்,இரும்பு,வைட்டமின்கள்,சோடியம் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

5 முதல் 10 வயது குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள்:

தினமும் ஏதேனும் ஒரு பழத்தை உட்கொள்ள கொடுக்கலாம்.அதிக இனிப்பு நிறைந்த எளிதில் சளி பிடிக்க கூடிய பழங்கள்,குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படுத்தும் பழங்களை தவிர்த்துவிட்டு அவர்களின் ஆரோக்கியத்திற்கு உகந்த பழங்களை கொடுக்கலாம்.இதன் குழந்தைகளுக்கு அனைத்துவித ஊட்டச்சத்துக்களும் கிடைத்துவிடும்.

பிறகு தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் கால்சியம் சத்து கிடைக்க பால் ஒரு கிளாஸ் கொடுக்கலாம்.பச்சை காய்கறிகளை அரைத்து தோசை மாவு அல்லது கோதுமை மாவில் கலந்து உணவு செய்து கொடுக்கலாம்.

சிறு தானியங்களில் கஞ்சி,களி,தோசை,இட்லி போன்ற ஆரோக்கிய உணவுகள் செய்து கொடுக்கலாம்.தினமும் ஒரு வேகவைத்த முட்டை சாப்பிடும் குழந்தைகளுக்கு உடலில் புரதச்சத்து அதிகரிக்கும்.

முட்டை விரும்பாத குழந்தைகளுக்கு முட்டைக்கு இணையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை செய்து கொடுக்கலாம்.தினமும் ஏதேனும் ஒரு உலர் பழங்கள் அல்லது உலர் விதைகளை சாப்பிட கொடுக்கலாம்.

குழந்தைகள் பழத்தை விரும்பவில்லை என்றால் அதை அரைத்து ஜூஸாக கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு கொடுக்கும் ஜூஸில் சர்க்கரை போன்ற எந்த இனிப்பும் சேர்க்கக் கூடாது.எண்ணையில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை கொடுக்கக் கூடாது.கடைகளில் இருந்து இறைச்சி சில்லி,வறுவல்,மைதா உணவுகள் வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

பாலில் அதிக கால்சியம் சத்து இருக்கிறது என்றாலும் கொழுப்பு குறைவான பாலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.பாலுக்கு இணையான ஊட்டச்சத்து தயிரில் இருக்கிறது.சிறுதானிய சப்பாத்தி அதற்கு சைடிஸாக காய்கறி பொரியல் செய்து கொடுக்கலாம்.சப்பாத்திக்கு ஜாம்,கெட்சப் போன்றவற்றை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.எளிதில் செரிக்க கூடிய உணவுகளை காலை மற்றும் இரவு நேரத்தில் கொடுக்க வேண்டும்.

Exit mobile version