Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பல சத்துக்கள் நிறைந்த பாசிப்பருப்பு லட்டு! எளிமையாக எவ்வாறு செய்வது?

#image_title

பல சத்துக்கள் நிறைந்த பாசிப்பருப்பு லட்டு! எளிமையாக எவ்வாறு செய்வது?

உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பாசிப்பருப்பை வைத்து லட்டு எவ்வாறு செய்வது அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக லட்டு என்றாலே அனைவருக்கும் பிடித்தமான இனிப்பு வகையை சேர்ந்த ஒரு உணவுப் பொருள் ஆகும். இந்த லட்டை பாசிப்பருப்பு வைத்து தயார். செய்யும் பொழுது உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றது.

பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், புரோட்டீன், நார்ச்சத்து ஆகியவை உள்ளது. பாசிப்பருப்பை சாப்பிடுவதால் மேற்கண்ட சத்துக்கள் கிடைக்கின்றது.

லட்டில் மிகவும் சிறந்தது என்னவென்றால் திருப்பதியில் கிடைக்கும் திருப்பதி லட்டு தான். இந்த லட்டுவில் பல இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்கள் சேர்க்கப்படுவதால் உடலுக்கும் பல ஆரோக்கியமான சத்துக்கள் கிடைக்கின்றது.

அதே போல ரவையை வைத்து தயார் செய்யக் கூடிய ரவா லட்டும் அனைவருக்கும் பிடித்த இனிப்பு வகைகளில் ஒன்றாக இருக்கின்றது. இதில் சமையலுக்கு பயன்படும் பாசிப்பருப்பு வைத்தும் லட்டு தயார் செய்யலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதற்கு தேவையான பொருட்கள் பற்றியும் எவ்வாறு செய்வது என்பது குறித்தும் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்…

* பாசிப்பருப்பு
* வெல்லம்
* நெய்
* பாதாம்
* முந்திரி

செய்முறை…

முதலில் பாசிப்பருப்பை கடாயில் போட்டு வறுத்து ஆற வைக்க வேண்டும். பின்னர் அதனுடன் சேர்த்து முந்திரி, பாதாம் இவற்றையும் சேர்த்து அதை மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து கடாய் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த கடாயில் மூன்று ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மற்றொரு கடாய் வைத்து அதில் வெல்லத்தை பொடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வெல்லத்தை பாகு போல செய்ய வேண்டும்.

வெல்லம் கரைந்த பின்னர் முக்கால் பாகம் கரைசலை மாவில் சேர்த்துத் கொள்ள வேண்டும். பின்னர் லட்டு பிடிக்கும் பதத்திற்கு கரண்டியால் மாவை பிசைந்து கொள்ள வேண்டும். இறுதியாக மீதமுள்ள வெல்லக் கரைசலையும் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த மாவை எடுத்து உருண்டை வடிவமாக வடிவமாக பிடித்தால் சுவையான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாசிப்பருப்பு லட்டு ரெடி.

Exit mobile version