Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பன்னீர்செல்வத்திற்கு கைகொடுக்கும் டிடிவி தினகரன்! அடுத்து நடக்கப்போவது என்ன?

சிறையிலிருந்து வெளியே வந்ததில் இருந்து அதிமுகவை கைப்பற்றும் வேலையில் மறைமுகமாக இறங்கி வருகிறார் சசிகலா.

சிறையிலிருந்து வெளியே வந்த புதிதில் தான் அரசியலில் இருந்து விலகி கொள்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தமிழகத்தில் அனைவரையும் வாயடைக்க செய்தார் சசிகலா, ஆனாலும் அவர் தந்திரமாக அதிமுகவை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது.

காரணம் அதிமுகவின் தொண்டர்கள் மற்றும் தலைமை மீது அதிருப்த்தியில் இருக்கக்கூடிய முன்னாள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இடம் தொலைபேசி மூலமாக உரையாடி அந்த உரையாடலை பதிவு செய்து பொதுவெளியில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் சசிகலா. இதன்மூலம் அதிமுகவில் இருக்கக்கூடிய தலைமைகள் தன்னை ஒதுக்கி விட்டாலும் இன்னும் தொண்டர்கள் மத்தியில் தனக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை வெளிக்காட்டி கொள்வதற்காகவே அவர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்து இருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

இந்த நிலையில்தான் சமீபத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக கழகத்தின் தலைமை கழக நிர்வாகிகள் கலந்துரையாடி முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்திருந்தார். ஆனால் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி சசிகலா கட்சியில் இணைவதற்கான வாய்ப்பே இல்லை என்று ஒரேயடியாக மறுத்தார்.

இதன் மூலம் அதிமுக தலைமை இடையே இருவேறு கருத்து வேறுபாடுகள் இருப்பது உறுதியானது இந்தநிலையில், சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்திருப்பது சரியான கருத்து என்று டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் எப்போதும் நிதானமாக உரையாற்ற கூடிய ஓபிஎஸ் அவர்கள் சரியான கருத்தையே தெரிவித்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார் டிடிவி தினகரன். ஆனால் பன்னீர்செல்வம் அவர்களை ஒரு காலத்தில் கடுமையாக விமர்சனம் செய்தவரும் இதே டிடிவி தினகரன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version