Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரச்சாரம் என்ற பெயரில் ஓபிஎஸ் தொகுதியில் அவமானப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தியாகி என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அவர் தியாகி அல்ல புத்திசாலி என்று அவரை பாராட்டும் விதமாக பேசி இருக்கிறார்.எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக எப்படியும் மண்ணை கவ்வ போகிறது அதிமுக அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அந்த கட்சிக்கு பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுக் கொடுத்துவிட்டார் ஓபிஎஸ் என்று தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

அதோடு மட்டுமல்லாமல் எதிர்வரும் தேர்தலில் அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்கள் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார். அது பன்னீர்செல்வத்தை குறிவைத்து பேசியதுதான் ஆகவே அவர்களுக்கு உள்ளே இருக்கின்ற பிரச்சினையை முதலில் செய்துவிட்டு பின்பு தேர்தலை சந்திக்கட்டும் என்று தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.ஆனால் அதிமுகவின் துரோகிகள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டது சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை தான் ஆனால் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இவ்வாறு பேசியிருக்கிறார்.

பத்தாண்டு காலமாக ஆட்சிக்கு வர முடியாத விரக்தியில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களும் அந்த கட்சியை சார்ந்தவர்களும் என்ன பேசுகிறோம் என்று பேசுகிறோம்பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாய்க்கு வந்ததை உளறிக் கொண்டிருக்கிறார்கள்.அதோடு தேர்தல் சமயம் என்பதால் மத்திய அரசு பல திட்டங்களை தெரிவித்து தமிழக மக்களை ஏமாற்றுகிறது அவர்களுடன் சேர்ந்து அதிமுக அரசும் தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்ற கருத்தையும் அவர் தெரிவித்திருக்கிறார்ஆனால் நீங்கள் ஆட்சியில் இருந்த சமயத்தில் மக்களை ஏமாற்றி சுரண்டி தின்றதை விடவா தற்போது நாங்கள் ஏமாந்து போய் இருக்கிறோம் என்கிற ரீதியில் கருத்துக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

திமுகவைப் பொறுத்தவரையில் கருணாநிதி இருந்த சமயத்தில் இருந்த தமிழக மக்கள் போலவே இப்பொழுதும் மக்கள் என்ற முழு விபரத்தையும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்கிற ரீதியில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.திமுகவின் இந்த எண்ணமே அந்த கட்சியை அழிவின் பாதைக்கு அழைத்துச் சென்று விடும் என்று சொல்கிறார்கள். அப்போது நிலவரம் வேறு இப்போது நிலவரம் வேறு இதனை சரிவர புரிந்து கொள்ளாத எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். இதற்கான பலனை அவர் விரைவில் அறிவிப்பார் என்று தெரிவிக்கிறார்கள் சாதாரண மக்கள்.

அதோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தோல்வி பயத்தின் காரணமாக ஆத்திரத்தின் உச்சியில் இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். ஆனால் தாங்களே தோல்வி பயத்தின் காரணமாக எதை பேசுகிறோம் எதை பேசலாம் என்று தெரியாமல் பலவாறு உலாவிக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் உதறிவிட்டு அவர்களை குற்றம் சொல்லலாமா தளபதியாரே என்கிற ரீதியில் சமூக வலைதளங்களில் ஸ்டாலின் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக கூட்டத்தொடரின் கடைசி தினத்தில் வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அப்போது அமைதியாக இருந்த ஓபிஎஸ் தற்சமயம் அது தற்காலிகமாக சட்டம் என்று சொல்கிறார். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இது நிரந்தரமான சட்டம் என்று முதலமைச்சர் உறுதியாக தெரிவித்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

மக்களை ஏமாற்றுவதற்காகவே இது போன்ற நாடகங்கள் நடத்தப்படுகின்றன என்று தெரிவித்திருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின்.ஆனால் ஈழத் தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட போது உண்ணாவிரதம் என்ற மிகப்பெரிய நாடகத்தை உங்களுடைய தந்தை நடத்தினார் அதை விடவா இது பெரிய நாடகம் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள் இளம் தலைமுறையை சேர்ந்தவர்கள்.

Exit mobile version