எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு? கு.ப.கிருஷ்ணன் சொன்ன பதில்!!
ஓபிஎஸ் ஆதரவாளரான கு.ப.கிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வாய்ப்பு உள்ளதா? இபிஎஸ் ஓபிஎஸ் சந்திப்பு நிகழுமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் சுவாரசியமான பதிலை கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் நிற்க இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் வெவ்வேறு வேட்பாளரை அறிவித்தனர். இதனால் அதிமுகிவில் குழப்பம் நீடித்தது. இந்நிலையில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தங்கள் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெறுவார் என ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டியதற்கு நன்றி. இரட்டை இலை சின்னம் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ் தரப்புக்கு கிடைத்ததால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை என்று தெரிவித்தார். மேலும் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரச்சாரம் செய்வோம் என்றும் அவர் கூறினார்.
எடப்பாடி பழனிசாமியை ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பாரா என்ற கேள்விக்கு, அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று பதிலளித்தார். இதனால் இபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பார்களா, மீண்டும் அவர்கள் இணைய வாய்ப்புள்ளதா என்று அதிமுகவினரிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.