Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஏமாற்றம் அளித்த பொதுக்குழு கூட்டம்! டெல்லிக்கு பறந்தார் பன்னீர்செல்வம்!

அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான விவகாரம் கடந்த ஒரு வார காலமாக பரபரப்பாக நடைபெற்று வந்தது. அதன் எச்சமாக நேற்றைய தினம் சென்னை வானகரத்தில் அந்த கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் இதற்கு முன்பாக இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஏற்கனவே இருபத்தி மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தன்னுடைய ஒப்புதலுக்காக தன்னிடம் வழங்கப்பட்டது. அவருக்கு ஒப்புதல் வழங்கி விட்டேன் என்று தெரிவித்திருந்தார் ஓபிஎஸ்.

மேலும் இனிமேல் இந்த தீர்மானத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யக்கூடாது என்று தெரிவித்திருந்தார் அந்த மனுவில். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அந்த தீர்மானங்களில் எந்தவிதமான மாற்றமும் செய்யக்கூடாது என்று நேற்று அதிகாலை தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், நேற்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் இந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் அந்தக் கூட்டு அரங்கத்தை விட்டு வெளியேறினார். தொடர்ந்து எதிர்வரும் 11ஆம் தேதி புதிய பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. முன்னதாக அதிமுகவின் தற்காலிக தலைவராக இருந்த தமிழ்மகனின் நிரந்தர அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்பு அவர் மூலமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்றிருக்கிறார். அங்கே தலைமை தேர்தல் ஆணையரை சந்திப்பதற்கு அவர் முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் நடந்தது தொடர்பாக புகார் வழங்க முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

நிலைமீ இப்படியே சென்றால் மீண்டும் பழைய நிலைக்கு அதிமுக செல்வதற்கான வாய்ப்புள்ளது என்றும், பலர் தெரிவித்து வருகிறார்கள்.

Exit mobile version