Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மோசடி கும்பலிடம் சிக்கிய ஆபாச புகைப்படம்! வசமாக மாட்டிய விஜய் டிவி பிரபலம்!

Obscene photo caught by fraudsters! Vijay is a popular TV celebrity!

Obscene photo caught by fraudsters! Vijay is a popular TV celebrity!

மோசடி கும்பலிடம் சிக்கிய ஆபாச புகைப்படம்! வசமாக மாட்டிய விஜய் டிவி பிரபலம்!

தற்பொழுது ஆன்லைனில் வரும் மோசடி ஆப்களால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைனில் வரும் லோன் ஆப்பை பயன்படுத்தி பலரும் கடன் பெறுகின்றனர். அவ்வாறு இன்ஸ்டால் செய்து கடன் பெறும் ஆப்கள், அந்த ஃபோனையே ஹேக் செய்து விடுகிறது. இவர்கள் கடன் தொகையை கட்டி முடித்த பிறகும் இவர்களின் புகைப்படத்தை வைத்து மிரட்டி, மேலும் பணத்தை வாங்கி வருகின்றனர். இவ்வாறான கும்பலிடம் தான் பிரபல சீரியல் நடிகை மாட்டிக்கொண்டு உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பிரபல நாடகங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் லட்சுமி வாசுதேவன்.

இவர் இதுவரை தில்லாலங்கடி, 555 ஆகிய படங்களிலும் கூட நடித்துள்ளார். இவருக்கு சமீபத்தில் ரூ 5 லட்சம் பரிசு வந்துள்ளது என குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த ஐந்து லட்சத்தை பெற வேண்டும் என்றால் இந்த லிங்கை கிளிக் செய்து ஆப்பை டவுன்லோடு செய்யும் படி கூறியுள்ளனர். இவரும் அந்த பரிசுத் தொகைக்கு ஆசைப்பட்டு அந்த ஆப்பை டவுன்லோட் செய்து உள்ளார். பிறகு அந்த ஆப் மூலம் இவரது போனை ஹேக் செய்துள்ளனர். இவரிடம் பலமுறை பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

பணம் தர இவர் மறுத்தால், இவரது புகைப்படங்கள் அனைத்தையும் எடுத்து மார்பிங்க் செய்து இவரது நண்பர்களுக்கும் அனுப்பி உள்ளனர். இவர் இதிலிருந்து எப்படி விடை பெறுவது என்று அறியாமல் சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். நான் பரிசுத் தொகைக்கு ஆசைப்பட்டு இந்த லிங்கை கிளிக் செய்து இவ்வாறு மாட்டிக்கொண்டேன். இவர்கள் என் போனை ஹாக் செய்து அதிலிருந்து தொலைபேசி எண்களை எடுத்து மார்பிங் செய்த புகைப்படத்தை எனது பெற்றோருக்கு அனுப்பி விட்டனர். நான் எப்படிப்பட்ட பெண் என்பது அனைவருக்கும் தெரியும். இதுபோல் ஏதேனும் குறுஞ்செய்தி உங்கள் செல்போனிற்கு வந்தால் உடனே அதனை தவிர்த்து விடுங்கள். என்னை போல் நீங்களும் மாட்டிக்கொள்ளாதீர்கள் என கண்ணீர் மல்க சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.மேலும் இந்த ஆன்லைன் ஆப் குறித்து ஹைதராபாத் சைபர்கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Exit mobile version