ஒடிஷா மாநிலத்தில் மொத்தம் 721 காலிப்பணியிடங்கள் உள்ளன. 477 சப்-இன்ஸ்பெக்டர் போஸ்டகளும் 244 கான்ஸ்டபிள் போஸ்ட்களும் உள்ளன.
ஒடிசா மாநிலத்தில் உள்ள காவல்துறை இப்பொழுது திருநங்கைகளையும் பணியமர்த்தும் பணிகளைத் தீவிரமாக செய்து வருகிறது. அதேபோல் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணிக்கு திருநங்கைகளிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறோம் என்று சொல்லியுள்ளது.
ஆன்லைன் மூலம் திருநங்கைகளும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஜூன் 22ஆம் தேதி ஆன்-லைன் தளம் திறந்து ஜூலை 15ஆம் தேதி முடிவடையும் என்று குறிப்பிட்டுள்ளது.
மாநில மக்களுக்கு சேவை செய்ய கான்ஸ்டபிள் மற்றும் S.Iகளை ஒடிசா காவல்துறை பகுதியில் சேர தகுதியான பெண்கள் மற்றும் ஆண்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் முதன்முறையாக திருநங்கைகள் பிரிவை சேர்ந்தவர்களும் இந்த இரு பதவிகளுக்கும் விண்ணப்பிக்கலாம் என மாநில இயக்குனர் ஜெனரல் அபய் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதுகுறித்து அபய் கூறியதாவது, S.I பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு முக்கிய போலீஸ் பதவிக்காக செய்யப்படும் என்றும் கான்ஸ்டபிள் பதவி ஒரு தொழில்நுட்ப துறை சம்பந்தமாக செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
மாற்றுத்திறனாளி திருநங்கைகள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் அல்ல என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான கல்வித்தகுதி, சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு குறைந்தபட்ச தகுதி பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கான்ஸ்டபிளுக்கு பிளஸ் டூ உடன் டிப்ளமோ கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்திருக்க வேண்டும்.
கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் உடல் மற்றும் செயல்திறன் சோதனைகளும் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒடிசா காவல்துறையினரின் இந்த முடிவை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றனர்.
முதன்முறையாக மாநிலத்தில் அரசு வேலைகளில் திருநங்கைகளிடம் இருந்து விண்ணப்பம் கோரி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருநங்கைகளின் நம்பிக்கையை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் சமூகத்தின் மீது அவர்களின் பார்வை மாற்றும் வகையில் இது அமையும் என்று மகாசங்கின் நிறுவனர் தலைவர் பிரதாப் குமார் கூறினார்.