Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரூ.9000 செல்போனுக்கு ரூ.8000 ஆயிரம் வரை ஆப்பர்! ஜியோ மற்றும் ஒப்போவின் அதிரடி!  

Offer up to Rs. 8000 thousand for Rs. 9000 cell phone! Action by Geo and Oppo!

Offer up to Rs. 8000 thousand for Rs. 9000 cell phone! Action by Geo and Oppo!

ரூ.9000 செல்போனுக்கு ரூ.8000 ஆயிரம் வரை ஆப்பர்! ஜியோ மற்றும் ஒப்போவின் அதிரடி!

வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் மக்கள் அனைவரும் டெக்னாலஜி வழியே செல்கின்றனர்.அந்தவகையில் தற்பொழுது ஜியோ ஒப்போ-வுடன் இணைந்து புதிய சலுகை திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.இந்த சலுகையை மக்கள் உபயோகம் செய்து பயனடைய முடியும்.இன்று ஒர் மொபைல் போன் வாங்கி செல்கிறோம் என்றால் நாளையே அதனுடைய தரம் குறைந்ததாக தான் காணப்படுகிறது.ஏனென்றால் மாதம் மாதம் புது புது மாடல்களை அந்தந்த நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.

அதனால் வாங்கிய மாடலுடன் தற்போது வெளிவந்த மாடலை ஒப்பிட்டு பார்க்கையில் தரம் சற்று குறைந்து காணப்படுகிறது.அதுமட்டுமின்றி வாங்கும் போது ஏற்படும் விலையை தற்போது நாம் விற்கும் போது எடுக்க முடியாது.அந்தவகையில் ஒப்போ சென்ற வருடம் ஏ15 என்ற மாடலை அறிமுகம் செய்தது.இது வாங்கு போது இதன் மதிப்பு அதிகமானதாக இருந்தாலும்,தற்பொழுது இதனை விட அட்வான்ஸ் மாடல்கள் வந்ததால் இதனை யாரும் வாங்க முன் வரவில்லை.இதனை மக்கள் வாங்குவதற்கு பல சலுகைகள் கொடுத்துள்ளனர்.இதன் ஆரம்ப விலை 12,000 ஆக இருந்தது.

தற்போது இதன் விலையை 1000 ஆக குறைத்து 9,991 தற்போது விற்கப்பட்டு வருகிறது.அதுமட்டுமின்றி இதனுடன் ஜியோ ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள ஆப்பர் வழங்கப்பட்டுள்ளது.மேலும் வட்டியில்லாமல் மாத தவணை வசதி மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.இந்த ஒப்போ ஏ15 மாடலில் 6.52 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

மீடியாடெக் ஹீலியோ பி35 பிராஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.இதனுடன் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி டூயல் சிம் 4ஜி, டூயல் பேண்ட் வைபை கொண்டுள்ளது.ப்ளூடூத் 5, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்,மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.இந்த ஸ்மார்ட்போன் கலர் ஓ.எஸ். 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 மற்றும் 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டுள்ளது.

Exit mobile version