மத்திய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா ஏலம்!
1932ஆம் ஆண்டு டாடா குழுமத்தால் உருவாக்கப்பட்டது தான் டாடா ஏர்லைன்ஸ் ஆகும். இந்த நிறுவனம் 1946 ஆம் ஆண்டு ஏர் இந்தியா என பெயர் மாற்றப்பட்டது. சில காரணங்களால் இந்நிறுவனம் 1953ஆம் ஆண்டு அரசுடமையாக்கப்பட்டது. தற்பொழுது இந்நிறுவனம் அதிக அளவு நட்டத்தை சந்தித்து வருகிறது. இந்திய அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனம் தற்போது அதிக அளவு கடன் வாங்கி கட்டமுடியாமல் தவித்து வருகிறது. கிட்டத்தட்ட 60 ஆயிரம் கோடிக்கும் மேலாக கடனை பெற்று செலுத்த முடியாமல் திக்குமுக்காடி உள்ளது.
அதனால் மத்திய அரசு 2018 ஆம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க முயற்சி செய்தனர். ஆனால் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க ஒருவர் கூட முன்வரவில்லை. சில மாதங்களுக்கு முன் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. கடந்த மாதம் 15ஆம் தேதி நிறுவனத்தை ஆரம்பித்த டாடா குழுமமே ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதாக செய்தி பரவியது. அதுமட்டுமின்றி டாடா குழுமத்தின் ஏலத் தொகையை மத்திய அரசு வாங்கி விட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது.
ஆனால் இது அனைத்தும் வதந்தி தான் ,என மத்திய அரசு கூறியது. ஆனால் இன்று மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஏர் இந்தியாவை வாங்குவதற்கான ஏலத்தை டாடா நிறுவனம் என்று உள்ளதாக கூறியுள்ளனர். ரூ. 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாடா குழுமம் ஏர் இந்தியாவை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த ஏல பண பரிவர்த்தனை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.68 ஆண்டுகள் கழித்து தாங்கள் உருவாக்கிய நிறுவனத்தையே டாடா குழுமம் வாங்கியது எனபது குறிபிடத்தக்கது.