சேலம் மாவட்டத்தில் வீட்டை எழுதி கேட்டு மிரட்டிய அதிகாரிகள்! போலீசார் வழக்கு பதிவு!
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரப்பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (44). அவரது மனைவி ஜோதி.மேலும் சுரேஷ் பேருந்து நிலையத்தில் டீக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2013ஆம் ஆண்டு வீரனூரில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். மேலும் அவரது குடும்பத் தேவைக்காக 35 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
மேலும் அதே தனியார் நிறுவனத்தில் மூன்று லட்சத்திற்கான மாத ஏலச்சீட்டும் போட்டு வந்துள்ளார். 13 மாதங்கள் ஏலச்சீட்டு தவணைகள் கட்டிய நிலையில் சுரேஷ் அந்த சீட்டை எடுத்துள்ளார். அதற்காக மீதி தொகையும் செலுத்தாமல் இருந்து வந்ததால் தவணையை கட்ட பலமுறை சுரேஷிடம் கேட்டு தராததால் அவரது மனைவி ஜோதி கடந்த 2015 ஆம் ஆண்டு குடியிருக்கும் வீட்டின் பத்திரத்தை அடமானமாக பைனான்ஸ் நிறுவனத்திற்கு எழுதிக் கொடுத்துள்ளார். கடந்த மாதம் 17ஆம் தேதி பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் செல்வம், கோபி உள்ள பட நான்கு பேர் சுரேஷிடம் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். அப்போது சுரேஷ்குமார் பணம் இல்லை என தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து சுரேஷ்குமாரின் வீட்டை எழுதிக் கொடுக்கும்படி நிறுவனத்தின் ஊழியர்கள் சுரேசை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து கடந்த மாதம் 27ஆம் தேதி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் சுரேஷ் அளித்தார். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் வீரனூர் காவல் ஆய்வாளர் சிவகுமார் சுரேஷ் வாங்கிய கடனுக்கு வீட்டை எழுதி கேட்டு மிரட்டையாக கந்துவட்டி வழக்கில் பைனான்ஸ் உரிமையாளர்கள் செல்வம் கோபி உட்பட நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.