Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓபிஎஸ்! பதறிப்போன தொண்டர்கள்!

தமிழ்நாட்டில் அதிகரித்து வருகின்ற நோய் தொற்று பரவல் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது இந்த நிலையில் முன்னால் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது பன்னீர்செல்வத்திற்கு திடீரென்று உடல்நல குறைவு உண்டானது.

இதனைத் தொடர்ந்து அவர் சென்னை அமைந்தகறையில் இருக்கின்ற எம் ஜி எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் முடிவில் அவருக்கு நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். அதோடு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆனாலும் பன்னீர்செல்வத்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் நாசர், மருத்துவர் ராமதாஸ், உள்ளிட்டோருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பன்னீர்செல்வம் நோய் தொற்று பாதிப்புக்காக சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிமுகவினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

Exit mobile version