அச்சோ தவெக வளரவே கூடாது.. மாநாட்டுக்கு முற்றிலும் நோ!! விஜய்யை மறைமுகமாக அட்டாக் செய்யும் திமுக!! 

0
415
Oh, don't grow hot.. Absolutely no to the conference!! DMK will indirectly attack Vijay!!

 

 

 

TVK DMK: நடிகர் விஜய் அவர்கள் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடத்த காவல் துறை இன்னும் அனுமதி அளிக்காமல் இருக்கும் நிலையில் இதன் பின்னால் திமுக கட்சியின் தலையீடுதான் காரணமாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக என இருபெரும் கட்சிகள் மட்டும் தான் அடுத்தடுத்து ஆட்சியில் அமர்ந்து தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகின்றன. இதன் மத்தியில் ஆளும் கட்சியான பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் கூட தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பல முயற்சிகளை செய்து வருகின்றன. இருப்பினும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளை எதிர்த்து யாராலும் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தை ஆட்சி செய்ய முடியவில்லை.

அதுவும் அதிமுக கட்சியின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைந்த பின்னர் திமுக கட்சி பலம் வாய்ந்த கட்சியாக மாறி விட்டது. இந்நிலையில் நடிகர் விஜய் தமிழகத்திற்கு எதாவது நல்லது செய்ய வேண்டும் என்று தன்னுடைய சினிமா தொழிலை விட்டுவிட்டு அரசியிலில் நுழைந்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் கட்சி தொடங்கிய பிறகு தமிழக வெற்றிக் கழகம் என்று பெயரும் வைத்தார். இதையடுத்து நடிகர் விஜய் கடந்த மாதம் கட்சிக் கொடி, கட்சிப் பாடல் ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து தற்பொழுது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்துவதில் நடிகர் விஜய் குறிக்கோளாக இருக்கிறார்.

முதல் மாநாட்டுக்கு இடங்களை தேர்வு செய்யும் வேலையில் களமிறங்கிய நிர்வாகிகள் மதுரை, திருச்சி என்று முக்கிய மாவட்டங்களில் இடங்களை பார்த்து இறுதியாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இடத்தை தேர்வு செய்துள்ளனர். மேலும் சில நாட்களுக்கு முன்னர் மாநாடு நடத்த அனுமதி கேட்டு காவல்துறையிடம் அனுமதி கடிதமும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்கள் வழங்கினார்.

இதையடுத்து காவல்துறையின் அனுமதியை எதிர்பார்த்து தமிழக வெற்றிக் கழகத்தினர் காத்திருக்கின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் இன்னும் அனுமதி அளிக்காமல் இழுத்து வருகின்றனர். இதற்கு பின்னால் திமுக கட்சியின் தலையீடு இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.

அதாவது மற்ற கட்சியினர் மாநாட்டுக்கு அனுமதி கேட்டால் காவல்துறையினர் வாய்மொழியாக விசாரித்து மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பதாகவும் தவெக கட்சிக்கு மட்டும் இவ்வாறு இழுபறி காட்டுவதாகவும் கூறுகின்றனர். அந்த வகையில் காவல்துறையினர் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் அவர்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸில் மாநாடு எப்பொழுது நடைபெறும், மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு எவ்வாறு உணவு வழங்குவீர்கள், மாநாட்டுக்கு எத்தனை பேர் வருவார்கள் ஆகிய கேள்விகள் உள்பட 21 கேள்விகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கேள்விகள் குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி காவல்துறைக்கு தவெக கட்சி நிர்வாகிகள் பதில் அளிப்பார்கள்.

ஆனால் இந்த மாநாட்டுக்கு அனுமதி அளிக்காமல் காவல் துறை இழுத்தடிப்பதற்கு பின்னால் திமுக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றது. அதாவது திமுக கட்சியின் தலையீடு இருப்பதால் கான் காவல்துறை தவெக கட்சியின் மாநாட்டுக்கு அனுமதி தராமல் இன்னும் தவெக கட்சியினரை காத்திருக்க வைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறும் நிலையில் தவெக மாநாடு குறித்தும் கட்சி குறித்தும் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் “இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எனவே தமிழகத்தில் ஜனநாயகம் இருக்கின்றது. இங்கு யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மாநாடு நடத்தலாம். அப்படி இருக்க நடிகர் விஜய் அவர்கள் கட்சி தொடங்கியது பார்த்து ஏன் பயப்படுகின்றது என்று தெரியவில்லை.

நடிகர் விஜய் அவர்கள் கட்சி தொடங்கியது திமுகவிற்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். திமுக கட்சியானது தங்களின் ஓட்டுகள் அனைத்தும் நடிகர் விஜய் கட்சிக்கு சென்றுவிடும் என்று பயப்படுகின்றது. இதுதான் திமுக கட்சியின் எண்ணமாக இருக்கின்றது.

எப்படி இருந்தாலும் அதிமுக கட்சிக்கு சாதகமாக அமையும். திமுக கட்சியை வெறுக்கும் நபர்கள் அனைவரும் அதிமுக கட்சிக்குத் தான் வாக்களிப்பார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குகள் சிதறாது என்பதில் நம்பிக்கை இருக்கின்றது. அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கட்சியின் மீது கோபம் கொள்பவர்கள் அனைவரும் அதிமுக கட்சிக்குத் வாக்களிப்பார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.