அடக் கடவுளே இப்படியும் நடக்குமா?? 12- வயது சிறுவனுக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு!!
12 வயது சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.
முன்பெல்லாம் 40 வயதை தாண்டியவர்களுக்கு வரக்கூடிய மாரடைப்பு தற்போது யாருக்கெல்லாம் ஏற்படும் என்பது இறைவன் வகுத்த விதியே. அந்த வகையில் பள்ளி செல்லும் ஆறாம் வகுப்பு மாணவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவன் உயிரிழந்துள்ளான்.
குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகா மாவட்டத்தின் விஜாப்பூர் கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் துஷ்யந்த் என்ற 12 வயதான சிறுவன் 6-ஆம் வகுப்பில் படித்து வந்தான்.
இந்த சூழ்நிலையில் இன்று அதிகாலை 5:30 அளவில் துஷ்யந்த் தனது வீட்டின் முற்றத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். விழிப்பு வந்ததும் சிறுவனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மற்றவர்கள் கூறுகையில் மருத்துவர்கள் தெரிவிக்கையில் சிறுவன் துஷ்யந்த் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மூர்ச்சையாகி உயிரிழந்ததாக தெரிவித்தனர். சிறுவனின் மறைவால் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அந்த கிராம மக்கள் அனைவரும் பெருத்த அதிர்ச்சிக்கு ஆளாகினர்.
இதையடுத்து விஜாப்பூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில் மாரடைப்பால் மரணம் அடைந்த சிறுவன் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதற்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது என தெரிவித்தார்.
மேலும் உயிரிழந்த சிறுவனின் இறுதிச்சடங்கில் அந்த கிராம மக்கள் அனைவருமே கலந்து கொண்டனர்.