Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! இளநரையை கருமையாக்க இப்படி கூட செய்யலாமா?

அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! இளநரையை கருமையாக்க இப்படி கூட செய்யலாமா?

ஆண்,பெண் என அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை இளநரை.இந்த பாதிப்பால் சிறு வயதிலேயே வயதான தோற்றத்தை பெற்று விடுகிறோம்.இதற்கு வாழ்க்கை முறை மாற்றம்,உணவு முறை,தலைக்கு ரசாயன ஷாம்பு உபயோகிப்பது போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.இந்த இளநரை பிரச்சனையை இயற்கை முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு தீர்வு காண்பது மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்:-

*பப்பாளி இலை சாறு – 1 கப்

*இண்டிகோ பவுடர் – 1தேக்கரண்டி

செய்முறை:-

1.ஒரு பப்பாளி இலை சுத்தமாக அலசி நறுக்கி கொள்ள வேண்டும்.

2.மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.

3.அவற்றை ஒரு பவுலுக்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.

4.இண்டிகோ அதாவது அவுரி பொடி 1 தேக்கரண்டி எடுத்து வடிகட்டி வைத்துள்ள பப்பாளி இலை சாற்றில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

5.இந்த ஹேர் பேக்கை தலை முடிகளின் வேர் பகுதிகளில் படும் படி தடவி 45 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.பிறகு சுத்தமான நீரிலில் முடியை அலச வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தி வந்தோம் என்றால் நீண்ட நாட்களாக இருக்கின்ற வெள்ளை முடி நாளடைவில் கருப்பாக மாறும்.மேலும் பப்பாளி இலை சாற்றில் உள்ள அதிகளவு என்சைம்கள் இருக்கின்றதால் அவை முடிகளின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது.

பப்பாளி இலைகளை காயவைத்து பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடித்து வந்தோம் என்றால் வாயு தொல்லை,வயிறு மந்தம்,நெஞ்சு எரிச்சல் போன்ற பாதிப்புகள் அகலும்.இந்த பொடி இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை சீராக பராமரிக்க உதவுகிறது.

Exit mobile version