ஓ அதற்கு இது தான் காரணமா? காங்கிரஸ் கட்சியின் அதிருப்தியால் முக்கிய நிர்வாகியை அதிரடியாக நீக்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

0
128

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கியவை ஒப்பிட்டு சர்ச்சை கருத்தை வெளியிட்ட அந்த கட்சியின் செய்தி தொடர்புச் செயலாளர் வழக்கறிஞர் கே எஸ் ராதாகிருஷ்ணனுக்கு கடும் எதிர்ப்பு திமுகவில் கிளம்பியுள்ளது.

இதனால் கட்சியிலிருந்து அவரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் இதன் மூலமாக காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து வந்த நேரு குடும்ப தலைமை மாற்றத்திற்கு முழு சம்மதம் தெரிவிக்கும் விதத்தில் அவருடைய நடவடிக்கை அமைந்திருக்கிறது.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடந்து முடிந்தது. மூத்தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கேவும் சசி தரூரும் போட்டியிட்டனர். தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். இந்த அறிவிப்பு வெளியானதும் அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். திமுகவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், வரும் 26 ஆம் தேதி டெல்லியில் இருக்கின்ற காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மல்லிகார்ஜுன கார்கே கட்சியின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் சார்பாக திமுகவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பங்கேற்று மல்லிகார்ஜுன கார்கேவுக் வாழ்த்து தெரிவிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தான் மல்லிகார்ஜுன காருக்கு தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட திமுகவின் செய்தி தொடர்பு செயலாளர் கே எஸ் ராதாகிருஷ்ணன் அந்த பதிவில் மன்மோகன் சிங் 2.o வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அல்லு அர்ஜுனா கார்கேவுக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

மன்மோகன் சிங் புகைப்படத்தில் மல்லிகார்ஜுன கார்கே வின் தலையை வைத்து மார்ஃபிங் செய்த போட்டோவையும் இணைத்திருந்தார். மன்மோகன் சிங் போல சோனியாவின் ரிமோட் கண்ட்ரோல் போல கார்கே செயல்படுவார் என்று பொருள்படும் விதத்தில் இந்த பதிவு அமைந்திருந்தது.

இந்த போட்டோ வேகமாக பரவி காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது உடனடியாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்திலிருந்து அந்த பதிவை ராதாகிருஷ்ணன் நீக்கினார். ஆனால் சமூக வலைதளங்களில் எழுந்த தொடர் விமர்சனம் காரணமாக அதிர்ச்சியடைந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக இருக்கின்ற தலித் சமுதாய தலைவர்கள் சிலர் கே எஸ் ராதாகிருஷ்ணன் மீது திமுக மேலிடம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் கே எஸ் ராதாகிருஷ்ணனை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்து திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்ததாவது, எதிர்வரும் லோக்சபா தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் விரும்புகிறார்.

மத்திய அமைச்சர் பதவிக்கான துறைகளை கார்கேவிடம் பேசி சுலபமாக பெற முடியும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஆகவே புதிய தலைவராக கார்கே தேர்வு செய்யப்பட்டதற்கு முழுமையான சம்மதம் தெரிவிக்கும் விதத்தில் அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார் மல்லிகார்ஜுன கார்கேவை கேலி செய்து சமூக வலைதளங்களில் ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்ததற்காக அவர் மீது நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட்டதற்கு திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி உறவு நீடிப்பது மட்டுமே கூட்டமைப்பு அல்ல.

மல்லிகார்ஜுன கார்கே தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர் அவரை விமர்சனம் செய்தால் தலித்துகளுக்கு எதிராக திமுக செயல்பட துவங்கிவிட்டது என்று சர்ச்சை எழலாம். இதனால் அந்த சமுதாய ஓட்டுகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு எதிராக சென்று விடக்கூடாது என்பதும் முக்கிய காரணம் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இடைநீக்கம் நடவடிக்கை தொடர்பாக கே எஸ் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கும்போது, நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை அமைதியாக இருக்கப் போகிறேன். கட்சி தலைமையிடமிருந்து நோட்டீஸ் வரவில்லை. இரண்டு தினங்களுக்கு பின் என்னுடைய கருத்தை தெரிவிப்பேன் என்றார்.

தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், கே எஸ் ராதாகிருஷ்ணன் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் கவிதை வரிகளை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதில் நான் பிரியப் போகும் இந்த நேரத்தில் என்னை வாழ்த்தி அனுப்புங்கள் என்று துவங்கி நான் இந்த வாழ்க்கையை விரும்பும் காரணத்தினால் மரணத்தை நேசிக்கிறேன் என்று கூறியுள்ளார்.