Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அய்யோ விட்டுடுங்க… என்னால முடியல… ; டைரக்டர் பாலா காலில் விழுந்த லைலா… – வெளியான தகவல்

அய்யோ விட்டுடுங்க… என்னால முடியல… ; டைரக்டர் பாலா காலில் விழுந்த லைலா… – வெளியான தகவல்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை லைலா. இவர் தன்னுடைய துறுதுறு கண்களால் ரசிகர்கள் தன் பக்கம் இழுத்தார். முதன் முதலில் எகிரே பவுரமா என்ற தெலுங்கு திரைப்படத்தில் தான் லைலா அறிமுகமானார்.

இதனையடுத்து, தமிழில் பிதாமகன், தில், நந்தா, தீனா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவருக்கு பிதாமகன், தீனா, பார்த்தேன் ரசித்தேன் படங்கள் நல்ல அடையாளத்தை கொடுத்தது. தமிழைத் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2006ம் ஆண்டு மேஹ்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

பல வருடங்கள் கடந்து லைலா சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்தார். இதனையடுத்து, தமிழில் நடிகைகள் சுதா சந்திரன் மற்றும் சினேகாவுடன் ஜீ தமிழில் டிஜேடி ஜூனியர்ஸ் என்ற நடன நிகழ்ச்சிக்கு நடுவராக கலந்து கொண்டார். பல வருடங்கள் கழித்து ‘சர்தார்’ படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் நடிகை லைலா குறித்த ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.

ஒரு சேனலில் இயக்குநர் பாலாவுடன் பணியாற்றிய சில சம்பவங்கள் குறித்து லைலா மனம் திறந்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘நந்தா’ படத்தில் நான் ஈழ பெண்ணாக நடித்தேன். அந்த சமயத்தில் எனக்கு தமிழ் சரியாவே பேச தெரியாது.

அப்போது, படத்தில் டயலாக்கில் நான் பேசும்போது நிறைய தப்பு தப்பாக பேசினேன். இதனால், பாலா சார் என்னை திரும்ப திரும்ப திட்டினார். ஒரு கட்டத்தில் எனக்கு கோபமே வந்துவிட்டது. இதற்கு மேல் என்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறினேன்.

அப்போது சிலர் என்னிடம் வந்து என்னை சமாதானப்படுத்தினர். இங்க பாரும்மா.. பாலா சார் நல்ல இயக்குநர். அவர் படத்தில் நடித்தால் உனக்கு பெயர், புகழ் கிடைக்கும். உன் வாழ்க்கை மாறும் என்று கூறினர். என்னை தேற்றிக்கொண்டு அப்படத்தில் நடித்து முடித்தேன்.

படம் ரிலீஸ் அன்றைக்கு நான் தியேட்டர் சென்று பார்த்தேன். எனக்கு ரொம்ப பிரம்மிப்பாகிவிட்டது. நானா இது.. இப்படி நடித்திருக்கிறேன் என்று அசந்துபோய்விட்டேன். உடனே நான் பாலா சார் காலில் விழுந்து என்னை மன்னிச்சுடுங்க… உங்கள் கோபத்தின் அர்த்தம் இப்போதுதான் எனக்கு புரிந்தது என்று கூறினேன் என்றார்.

 

Exit mobile version