Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அய்யய்யோ.. அவரைப்போல் டான்ஸ் ஆடினா டப்பா கழண்டுடும்! யார் அந்த நடிகர்?

அய்யய்யோ.. அவரைப்போல் டான்ஸ் ஆடினா டப்பா கழண்டுடும்! யார் அந்த நடிகர்?

தெறி,மெர்சல் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் அட்லீ அவர்கள் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை ஹீரோவாக வைத்து ‘ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.ராக் ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.இவர்களை தவிர்த்து விஜய் சேதிபதி,யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் வருகின்ற 7 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இதையடுத்து இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா 2 தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் ஹீரோ ஷாருக்கான்,விஜய் சேதுபதி, அனிருத்,அட்லீ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.விழாவில் ஆட்டம்,பாட்டம் என அரங்கமே களைகட்டியது.மேடையில் அனிருத்,பிரியா மணியுடன் இணைந்து ஷாருக்கான் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை போட்டார்.நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்கள் இவரின் ஆட்டத்தை செம்மையாக என்ஜாய் செய்தனர்.

இதனை தொடர்ந்து பேசிய ஷாருக்கான் தன்னால் தளபதி விஜய் போல் டான்ஸ் ஆட முடியாது என்று ஷோபி மாஸ்டரிடம் கூறியதாக ஷாருக்கான் தெரிவித்தார்.இதனால் கூட்டத்தில் இருந்த விஜய் ரசிகர்கள் அரங்கமே அதிரும் அளவிற்கு கத்தி கூச்சல் போட்டனர்.இதனை தொடர்ந்து விழா மேடையில் ஷாருக்கான் பேசியது அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.

Exit mobile version