அட இனி விசா தேவை இல்லை!! வெளிநாடுகளுக்கு சுலபமாக செல்லலாம் ஹேப்பி நியூஸ்!!
இந்தியாவில் தற்போது சுற்றுலா பயணம் அதிகரித்து உள்ளது. மேலும் மக்கள் அனைவரும் சுற்றுலா செல்ல அதிக அளவில் விரும்புகிறார்கள். மேலும் பல நாடுகளை சென்று அந்த நாடுகளில் உள்ள சிறப்பம்சங்களை பார்க்க ஆவல் படுகிறார்கள். ஆனால் பல நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் விசா வாங்க வேண்டும். அப்போது தான் நாடு விட்டு நாடு செல்ல முடியும். ஆனால் விசா இல்லாமல் இந்தியாவில் இருந்து சில நாடுகளுக்கு செல்ல முடியும்.
இந்திய சுற்றுலாப் பயணிகள் வெளிநாடுகளை சுற்றி பார்க்க வேண்டும் என்றால் பாஸ்போர்ட் மற்றும் விசா இரண்டும் முக்கியமாக தேவைப்படுகிறது. ஆனால் விசா இல்லாமல் பாஸ்போர்ட் மட்டும் வைத்து சில நாடுகளுக்கு எளிதாக செல்லலாம். வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றால் வெளியுறவுத்துறை துறை இடம் விசா வாங்க வேண்டும். இது மிகப்பெரிய ஒரு பிரச்சினையாகவே உள்ளது. ஆனால் குறிப்பிட்ட சில வெளிநாடுகளுக்கு விசா தேவை இல்லை.
இந்திய சுற்றுலா பயணிகள் ஆசியாவில் உள்ள பூட்டான், நேபாளம், மெக்காவு, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு விசா இல்லாமல் எளிதாக செல்லலாம்.
அதனை அடுத்து ஐரோப்பாவில் கண்டத்தில் உள்ள அல்பேனியா மற்றும் செர்பியா ஆகிய நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
அடுத்ததாக ஆப்பிரிக்காவில் உள்ள மரிஷியஸ் மற்றும் செனிகல் ஆகிய நாடுகளுக்கு செல்ல விசா தேவை இல்லை.
மத்திய கிழக்கு நாடுகளான ஓமன் கத்தார் நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ள முடியும்.
அதனைத் தொடர்ந்து அமெரிக்க கண்டத்தில் உள்ள எல் சால்வடார், பார்படாஸ், டொமினிக்கா, ஜமைக்கா, ஹெய்டி, டிரினிடாட் போன்ற நாடுகளுக்கு விசா தேவை இல்லை.
இதுபோன்ற நாடுகளுக்கு விசா தேவை இல்லை வெறும் பாஸ்போர்ட் வைத்து சுற்றுலா செல்லலாம் மேலும் இது மட்டும் இன்றி இதிலும் சில நாடுகளில் எளிய முறையில் சுற்றுலா செல்லலாம் குறிப்பாக நேபால், பூட்டான் இந்தோனேசியா, செர்பியா மற்றும் பார்படாஸ் இந்த ஐந்து நாடுகளுக்கு செல்வது மிக எளிதாக இருக்கும் மேலும் இந்த நாடுகளில் அதிக சுற்றுலா தலங்கள் உள்ளது.