Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“ஆமா நான் அப்படிதான் கடந்த காலத்தில் தவறு செய்தேன்”!! நடிகை சமந்தா ஓபன் டாக் !!

Oh yes I have done that wrong in the past!! Open Talk Actress Samantha!!

Oh yes I have done that wrong in the past!! Open Talk Actress Samantha!!

தமிழ் திரையுலகின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சிறந்த நடிகையாக வலம்வந்தவர் நடிகை சமந்தா ருத் பிரபு . தற்போது தென்னிந்திய திரையுலகத்திலும் தமிழ், தெலுங்கு என ரசிகர்கள் பட்டாளம் வைத்திருப்பவர் சமந்தா தான். இவர் நடித்த முதல் தமிழ் படம் கெளதம் மேனன்  இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா அதில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார்.

அதன் பின் பாணா காத்தாடி, நடுநிசி நாய்கள், நீ தானே என் பொன்வசந்தம், நான் ஈ, அஞ்சான், தியா வேலை செய்யணும் குமாரு, 10 என்றதுக்குள்ள, கத்தி, 24, U டர்ன், புஷ்பா, காத்துவாக்குல ரெண்டு காதல், குஷி, சகுந்தலம், என ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகை சமந்தா ருத் பிரபு.

இந்நிலையில், இந்த பின்னடைவு குறித்து சமந்தா பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘உண்மைதான், கடந்த காலத்தில் நான் சில தவறுகளை செய்தேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். கடந்த காலத்தில் சில விஷயங்கள் எனக்கு சரியாக அமையவில்லை. தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன்’ என்றார்.

மேலும் தற்போது இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கயுள்ள ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ தொடரில் நடித்து முடித்துள்ளார். இந்த தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிக்கந்தர் கெர், எம்மா கேனிங், கே கே மேனன் மற்றும் சாகிப் சலீம் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த தொடர் வரும் 7-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளது.

Exit mobile version