இரண்டாவது நாளாக தொடரும் ஓலா, ஊபர் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!!! மற்ற டேக்சி சேவைகளின் கட்டணம் அதிகரிப்பால் மக்கள் அவதி!!!
ஓலா, ஊபர் நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெறுவது காரணமாக சேவைக் கட்டணம் உயர்ந்துள்ளது. இதையடுத்து மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
கார் டேக்சி சேவையை வழங்கி வரும் ஓலா, ஊபர் ஆகிய நிறுவனங்களை சேர்ந்த டிரைவர்கள் நேற்று முதல் அதாவது அக்டோபர் 16 முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தனர்.
அந்த அறிவிப்பின் படி ஓலா, ஊபர் கார் டேக்சி டிரைவர்களின் முன்னாள் அமைச்சர் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று அதாவது அக்டோபர் 16ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும்(அக்டோபர்17) நடைபெற்று வருகின்றது.
பைக் டாக்சி சேவையை தடை செய்ய வேண்டும், வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், மீட்டர் கட்டண முறையை செயல்படுத்த வேண்டும் உள்பட பலவிதமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, ஊபர் டேக்சி டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் ஓலா, ஊபர் ஆட்டோக்கள் மற்றும் கார் டேக்சி ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இதன் எதிரொலியாக சேவைக் கட்டணத்தின் விலை திடீரென்று அதிகரித்துள்ளது.
அதாவது நேற்று(அக்டோபர்16) முதல் ஓலா, ஊபர் டிரைவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் குறைந்த அளவே டேக்சி சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து டேக்சி சேவையை வழங்கும் மற்ற நிறுவனங்களின் சேவை கட்டணம் குறைந்தது 50 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை அதிகரித்து உள்ளது.