96 வயதில் 4ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா!!! உடல்நல குறைவு காரணமாக காலமானார்!!!

0
91
#image_title

96 வயதில் 4ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா!!! உடல்நல குறைவு காரணமாக காலமானார்!!!

96 வயதில் 4ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா அவர்கள் தனது 101 வயதில் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். இவருடைய மறைவிற்கு கேரளா மாநில கவர்னர் ஆரிப் முகம்மது, முதல்வர் பினராயி விஜயன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கேரளா மாநிலம் ஆலப்புழா அருகே ஹரிப்பாடு என்ற பகுதியில் 101 வயதான மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா அவர்கள் வசித்து வருகின்றார். 101 வயதான இவர் குடும்ப ஏழ்மை காரணமாக சிறு வயதில் இருந்தே பணிக்கு செல்லத் தொடங்கினார். இதனால் இவரால் இளம் வயதில் பள்ளிக்கு செல்ல முடியாமல் போனது.

இந்த நிலையில் தனது 96வது வயதில் மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா அவர்களுக்கு படிக்க வேண்டும் என்ற. ஆசை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு 96 வயதில் மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா அவர்கள் 4ம் வகுப்பு படித்தார்.

மிகவும் ஆர்வமாக படித்த மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா அவர்கள் தேர்வில் 98 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து 4ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். இதன் மூலமாக மிக அதிக வயதில்(96 வயதில்) 4ம் வகுப்பு தேர்ச்சி செய்த முதல் நபர் என்ற பெருமையை மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா அவர்கள் பெற்றார். அந்த சமயம் முன்னாள் கவர்னர் இராம்நாத் கோவிந்த் அவர்கள் டெல்லியில் நாரீ சக்தி என்ற விருதை மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா அவர்களுக்கு வழங்கினார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவு காரணமாக மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா அவர்கள் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா அவர்கள் ஹரிப்பாடு பகுதியில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார்.

101 வயதில் உயிரிழந்த மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா அவர்களின் மறைவிற்கு கேரளா மாநில கவர்னர் ஆரிப் முகம்மது, கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் மக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.