டோக்கியோ ஒலிம்பிக்! பதக்கம் வெல்லுமா இந்தியா?

0
110

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் கோல்ப் விளையாட்டில் பங்கேற்க இருக்கின்ற இந்திய வீராங்கனை அதிதி அசோக்குமார் அவர்களுக்கு பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. பெண்கள் தனிநபரின் மொத்தம் நான்கு சுற்றுகள் நடந்தது அதில் அமெரிக்காவின் நெல்லி கோர்டா 192 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். அதிதி அசோக் குமார் 207 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கின்றார், 203 புள்ளிகளுடன் 4 வீராங்கனைகள் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள். மற்றொரு இந்திய வீராங்கனை தீக்‌ஷா தாக்கர் 220 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறார்.

இந்த விளையாட்டை பொறுத்தவரையில் குறைவான பள்ளிகளை வாங்குபவர்கள் வெற்றியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள். புல் வெளி மைதானத்தில் நீண்ட தூரத்திலிருந்து பந்தை அடிக்கும் சமயத்தில் ஒரே முறையில் பந்து இலக்குக்கு உரிய குழியில் விழுந்து விட்டால் முறையான புள்ளிகள் கொடுக்கப்படும். குழியில் செலுத்துவதற்காக அதிகமான முறையை எடுத்துக் கொண்டால் அதிக புள்ளிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதன் அடிப்படையில் புள்ளிகள் கணக்கிடப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், இன்று காலை 4 சுற்றுகள் நடந்திருக்கிறது இதற்கிடையே இந்திய வீராங்கனை அதிதி பங்கேற்றுள்ள இந்த போட்டி மழையின் காரணமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.