அதிபர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ஓமன் அரசு கண்டனம்!
கரீபியன் கடல் பகுதியில், உள்ள தீவு நாடான ஹைதியில், கடந்த 6 ம் தேதி அந்த அதிபரின் வீட்டினுள் நுழைந்த ஒரு அடையாளம் தெரியாத கும்பலினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிபர் கொல்லப்பட்டது தொடர்பாக, அந்நாட்டின் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் முதற்கட்ட விசாரணையின் போது, பல்வேறு நாட்டவர்கள் இதன் பின்னணியில் இருப்பது தெரியவந்தது. கொலம்பியாவை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் 26 பேர் முதற்கொண்டு இரண்டு அமெரிக்கர்கள் சேர்ந்து திட்டமிட்ட இனப்படுகொலை அரங்கேற்றி உள்ளதாக தெரியவந்தது.
இந்த படுகொலை தொடர்பாக இதுவரை 17 பேரை கைது செய்துள்ள போலீசார் மற்றவர்களையும் தேடி வருகின்றனர். இதற்கு ஓமன் அரசு அரசின் வெளியுறவுத்துறை செயலர் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் இருந்து கூட இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஓமன் அரசு அதை தெரிவித்துள்ளது.
இதில் நேற்று அந்த துறை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் நட்பு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனல் மாய்சே சுட்டுக் கொலை செய்யப்பட்டு இருப்பது, இரக்கமில்லாத செயல் என்றும், இதனை ஓமன் அரசு வன்மையாக கண்டிக்கிறது. அந்நாட்டின் அதிபர் மறைவுக்கு ஓமன் நாட்டின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். என்று கூறப்பட்டுள்ளது.
இப்படி செய்திகள் வந்த நிலையில் அந்த நிகழ்வைப் பற்றி வேறு ஒரு தகவல்களும், செய்திகளும், கிடைத்துள்ளது. அதாவது அந்த அதிபர் ஹிட்லரைப் போல் மிகவும் சர்வாதிகாரி என்றும், அவரை எதிர்த்து அந்நாட்டிலேயே கிளர்ச்சியாளர்கள் அதிகம் என்றும், அவர்களை பயங்கரவாதிகள் என்று அரசு அறிவித்து வைத்திருந்த நிலையில், அந்த அதிபரை எதிர்த்து அவர்களின் வீடுகளில் பல சூரையாடல்கள் நிகழ்ந்ததாகவும், அதன் காரணமாகவே அந்த குழு அதிபரை திட்டமிட்டு கொலை செய்ததாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.