வைகை புயல் வடிவேலுக்கு ஒமைக்ரானா? மருத்துவமனையில் திடீர் அனுமதி!
கொரோனா தொற்று ஆரம்பித்த காலக்கட்டத்திலிருந்தே மேல்மட்ட மக்களிலிருந்து கீழ் மட்ட மக்கள் வரை பலரையும் தாக்கி வருகிறது.கொரோனா தொற்றுக்கு முன்னிலையில் அனைத்து மக்களும் ஒன்று தான்.அந்தவகையில் பாரபட்சமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது. இந்த கொரோனா தொற்றானது பல அரசியல் பிரமுகர்கள்,பல சினிமா பிரபலங்கள் என ஆரம்பித்து தொழிலதிபர்கள் வரை அனைவரின் உயிரையும் பறித்தது.அதுமட்டுமின்றி பாமர மக்களின் உயிரையும் பறித்தது.தற்பொழுது தான் மத்திய அரசு பல கட்டுப்பாட்டு வழிமுறைகளை அமல்படுத்தி உள்ளது.
அதுமட்டுமின்றி அரசாங்கம் கொரோனா தடுப்பூசியும் அமல்படுத்தியுள்ளது.மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் தவறாமல் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.அதுமட்டுமின்றி தடுப்பூசி செலுத்தாத மக்களையும் கண்டு அவர்களுக்கு அறிவுரை கூறி தடுப்பூசி செலுத்த வைப்பதில் அரசாங்கம் முக்கிய பங்காற்றி வருகிறது.தற்பொழுது தான் கொரோனா தொற்றின் இரண்டு அலைகளை கடந்து மக்கள் தங்களது தினசரி வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் தற்பொழுது தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்றின் உறுமற்றாமாக ஒமைக்ரான் காணப்படுகிறது.அத்தொற்றானது அனைத்து நாடுகளிலும் தற்பொழுது பரவி வருகிறது.இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தான் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இவர் வெளிநாடு சென்று இந்தியா திரும்பினார்.ஓர் இரு தினங்களாக இவருக்கு காய்ச்சல் இருந்து வந்துள்ளது.அதனையடுத்து சோதனை செய்து பார்த்ததில் இவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதுஅதனையடுத்து மேற்கொண்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அதனையடுத்து சிம்புவுக்கு கொரோனா தொற்று சோதனை எடுக்கப்பட்டது.சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வெளிவந்தது.அதனையடுத்து தற்பொழுது வைகை புயல் வடிவேலுக்கு இரு தினங்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்துள்ளது.
சோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.மேலும் இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அதுமட்டுமின்றி இயக்குனர் சுராஜ், வடிவேலுவை வைத்து நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார்.இந்த படபிடிப்பானது லண்டனில் நடைபெற்று வந்தது.லண்டனில் படபிடிப்பு முடிந்து இந்தியா வந்த வடிவேலுக்கு சளி இருமல் இருந்த வந்த நிலையில் சோதனை மேற்கொண்டுள்ளார்.சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் ஒமைக்ரான் பரிசோதனை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.